March 17, 2017

நண்பனா? எதிரியா? முடிவு செய் ! படித்ததில் ரசித்தது

அந்தக் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான்.
https://4.bp.blogspot.com/-JSCF9C_BvXQ/V-PI6lCIZvI/AAAAAAAABlA/dfmiPiAgIuoJV53E3Rl2kh5u_sVnrR27gCLcB/s1600/good-versus-bad.jpgநண்பனா? எதிரியா? முடிவு செய்
சிறு கதை


வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன.

வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி சென்று விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும் கடித்து குதறுவதும் இருந்தன.

இதனால் கலக்கமுற்ற விவசாயி தன் அண்டைவீட்டுக்காரனான வேட்டைக்காரனை சந்தித்து “அப்பா… உன் நாய்களை கொஞ்சம் பார்த்துக்கொள். அவை அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளை தாக்குகின்றன. காயப்படுத்துகின்றன” என்றான்.

வேட்டைக்காரன் அதை சட்டை செய்யவேயில்லை. செவிடன் காதில் ஊதிய சங்காக அவை எந்த பயனும் இன்றி போனது.

ஒரு முறை நாய்கள் இதே போல வேலி தாண்டி வந்து பட்டிக்குள் புகுந்து பல ஆட்டுக்குட்டிகளை கடித்துக் குதறின.

இந்த முறை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று மீண்டும் வேட்டைக்காரனிடம் புகார் செய்ய சென்றான் விவசாயி.

வேட்டைக்காரன் இந்த முறை சற்று கோபத்துடன், “இதோ பார்… ஆட்டை துரத்துறது கடிக்கிறது இதெல்லாம் நாயோட சுபாவம். அதுக்கெல்லாம் நான் ஒன்னும் செய்யமுடியாது. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ” என்றான்.

இதைத் தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து தலைவரை சென்று சந்தித்த விவசாயி, வேட்டைக்காரனின் நாய்களால் தான் படும் துன்பத்தை எடுத்துக்கூறி, அவன் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.

முன்பொரு முறை பஞ்சாயத்து தலைவரின் மகளை ஒரு சிறிய விபத்திலிருந்து விவசாயி காப்பாற்றியிருப்பதால் பஞ்சாயத்து தலைவருக்கு விவசாயி மீது பெரும் மதிப்பு உண்டு.

விவசாயிக்கும் வேட்டைக்காரனுக்கும் இடையே உள்ள பிணக்கை பற்றி விசாரித்து தெரிந்துகொண்ட பஞ்சாயத்து தலைவர், “என்னால் பஞ்சயாத்தை கூட்டச் செய்து அந்த வேட்டைக்காரனை தண்டித்து, அபராதம் விதித்து அவன் நாய்களை கட்டிப்போடச் செய்ய முடியும்.

ஆனால், நீ தேவையின்றி இதனால் ஒரு எதிரியை சம்பாதிக்க நேரிடும். உனக்கு அது சொந்த வீடு. அவனுக்கும் அது சொந்த வீடு. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் தினசரி பார்க்கவேண்டும். அப்படியிருக்கையில் பக்கத்துவீட்டுக்காரன் நண்பனாக இருப்பதில் உனக்கு விருப்பமா அல்லது எதிரியாக இருப்பதில் விருப்பமா?”

பஞ்சாயத்து தலைவர் சொல்வதில் உள்ள யதார்த்தத்தை புரிந்து கொண்ட விவசாயி, அண்டை வீட்டுக்காரனை ஒரு நண்பனாக பார்ப்பதில் தான் தனக்கு விருப்பம் என்றான்.

“சரி… உன் ஆட்டுக்குட்டிகளும் பத்திரமாக இருப்பது போலவும் அவனும் உன் நண்பனாக இருப்பது மாதிரியும் நான் ஒரு தீர்வை சொல்கிறேன்… கேட்பாயா?”

“நீங்கள் எதைச் சொன்னாலும் கேட்கிறேன்”

அடுத்து பஞ்சாயத்து தலைவர் சில விஷயங்களை அவரிடம் சொன்னார்.

வீட்டுக்கு வந்த விவசாயி பஞ்சாயத்து தலைவர் தன்னிடம் சொன்ன விஷயங்களை பரீட்சித்து பார்க்க முற்பட்டான்.

தனது பட்டியில் இருக்கும் ஆட்டு குட்டிகளிலேயே மிகவும் அழகான இரண்டு குட்டிகளை எடுத்துச் சென்று, வேட்டைக்காரனின் இரண்டு மகன்களுக்கும் தலா ஒரு குட்டி விளையாட பரிசளித்தான்.

குழந்தைகளுக்கு தாங்கள் விளையாட புதிய தோழர்கள் கிடைத்ததில் ஒரே குஷி. இருவரும் அந்த குட்டிகளுடன் விளையாடி மகிழ்ந்தார்கள்.

தன் குழந்தைகளின் புதிய தோழர்களை பாதுக்காக்க, தற்போது வேட்டைக்காரன், நாய்களை சங்கலியில் கட்டிப்போட வேண்டியிருந்தது. யாரும் சொல்லாமலே அவன் நாய்களை சங்கிலியால் பிணைத்தான்.

தனது மகன்களுக்கு விவசாயி ஆட்டுக்குட்டிகள் பரிசளித்ததை தொடர்ந்து பதிலுக்கு அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பி, தான் காட்டிலிருந்து கொண்டு வந்த சில அரிய பொருட்களை பரிசளித்தான் வேட்டைக்காரன்.

ஆக இருவருக்குள்ளும் நல்லுறவு வளர்ந்து நாளடைவில் நல்ல நண்பர்களாகிவிட்டனர்.

மேற்கூறிய கதை அன்றாடம் பலருக்கு நடப்பது தான்.

பிரச்சனை தான் வேறு வேறு.

நம்மிடம் நியாயம் இருக்கிறது என்பதற்காகவோ, நம்மிடம் வலிமை இருக்கிறது என்பதற்காகவோ வீணாக எதிரிகளை சம்பாதித்துக்கொள்ளக்கூடாது.

ஆடுகள் முக்கியம் தான்.

ஆனால் அதைவிட மனஅமைதி முக்கியமல்லவா.......???

அனைவருக்கும் பகிருங்கள், சிந்திக்க வைக்கும் பயனுள்ள கதையாக இது இருந்தால்.

படித்ததில் ரசித்தது.
-->

December 27, 2016

விஜயா வங்கியில் புரொபேஷனரி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி வங்கியான விஜயா வங்கியில் 2017-2018-ஆம் ஆண்டிற்கான 44 புரொபேஷனரி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 44
பணி இடம்: பெங்களூரு
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Probationary Manager - Rajbhasha - 10
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950
பணி: Probationary Manager - Law - 14
சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950
பணி: Probationary Manager - Security - 20
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950
தகுதி: இளங்கலை பட்டம் + 5 ஆண்டு பணி அனுபவம், இந்தியில் ஆங்கிலத்துடன் முதுகலை பட்டம், சட்டத்துறையில் பி.எல் (எல்எல்பி) பட்டத்துடன் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.01.2017
ஆன்லைன் விண்ணப்பப்பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 09.01.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.vijayabank.com/images/fckimg/file/HRD/VIJAYA%20BANK%20-%20EMPLOYMENT%20NEWS%20-%20ENG%20-%20DRAFT.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
-->

December 24, 2016

பீகாரில் உள்ள பார்மசூட்டிக்கல் நிறுவனத்தில் வேலை


பீகாரில் உள்ள பார்மசூட்டிக்கல் நிறுவனத்தில் வேலை
காலியிடங்கள் = 6

பணி : Assistant Registrar (Acadamic/Admin)
வயது : 30.12.2016 தேதி அன்று 45 வயதுக்குள் இருக்கவேண்டும்
காலியிடங்கள் = 1 (CASTE : UR)
கல்வித்தகுதி  = Any Degree 55% with any PG DEGREE AND MINIMUM 5 YEARS EXP

பணி : System Engineer
வயது : 30.12.2016 தேதி அன்று 45 வயதுக்குள் இருக்கவேண்டும்
காலியிடங்கள் = 1 (CASTE:UR)
கல்வித்தகுதி  = COMPUTER SCIENCE DEGREE 55% MARK and PG in M.sc/M.E/M.Tech with 10 Years Experience
பணி : Section Office
வயது : 30.12.2016 தேதி அன்று 40 வயதுக்குள் இருக்கவேண்டும்
காலியிடங்கள் = 2 (UR:1   and   OBC : 1)
கல்வித்தகுதி  = Any Degree with 55% marks and 8 years Experience

பணி : Junior Technical Assistant
வயது : 30.12.2016 தேதி அன்று 30 வயதுக்குள் இருக்கவேண்டும்
காலியிடங்கள் = 1 (SC:1)
கல்வித்தகுதி  =  B.sc/B.pharm Degree with 50% marks and  2 TO 3 years Experienceபணி : Assistant Grade III
வயது : 30.12.2016 தேதி அன்று 40 வயதுக்குள் இருக்கவேண்டும்
காலியிடங்கள் = 1 (OBC:1)
கல்வித்தகுதி  = Any Degree with 50% marks and  2 TO 3 years Experience


விண்னப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.niperhajipur.ac.in  என்ற இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து அத்துடன் வயது,கல்வி,சாதி மற்றும் அனுபவ சான்றிதழ் நகல்களை வைத்து பதிவு / விரைவு தபால் மூலம் அனுப்பவேண்டிய முகவரி

THE DIRECTOR
NIPER – HAJIPUR
AT – RAJENDRA MEMORIAL RESEARCH INSTITUTE
OF MEDICAL SCIENCES (RMRIMS),
AGAMKUAN,
PATNA – 800 007, BIHAR.

விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்றடைய வேண்டிய கடைசி தேதி 30.12.2016.

-->

BANK EXAM