October 27, 2008

மதுரைநண்பனின் தீபாவளி சிறப்பு விருந்து

அனைத்து பதிவுலக வலை நண்பர்களையும் இந்த சிறப்பு தீபாவளி திருநாள் விருந்துக்கு வரவேற்கிறோம்.
























October 22, 2008

காப்பி பேஸ்ட் கலாச்சாரம்

என்னது புதுசா யோசிகனுமா.. என்ன கொடுமை சார் இது..

அனைவரது சிந்தனையும் திருடப்படுகிறது என்பது முற்றிலும் உண்மை தான் இதை யாரும் மறுக்க முடியாது. அனைத்து துறையிலும் நடக்கும் அவலம் இது வலைதுறையை மட்டும் அது விட்டு வைக்குமா என்ன.
படித்த, பார்த்த, கேள்விப்பட்ட மேலும் சிந்தனையில் உதித்த தகவல்களை மேலும் தேவைப்படும் இத்தகவல்களுக்கு இணையான செய்திகளை தேனிக்களை போல சேகரித்து அந்த தகவல்களுக்கு உருவம் கொடுத்து இந்த தகவல்களை தமிழ் பதிவாக மாற்றும் பொழுது அவலம் அவளமாக மாறி துறை துரையாக மாறி ஒரு பதிவை திருத்தி,இருத்தி வலை ஏற்றுவோர் ஒரு ரகம்.
இவ்வாறான பதிவுகளை காப்பி பேஸ்ட் கலாச்சார உதவியோடு கண்ணை மூடி கொண்டு தங்கள் பதிவுகளில் அப்படியே பதியம் போடுவோர் மற்றொரு ரகம்.




இது போல் உங்களது சிந்தனை எங்கு விலை போனது என்பதை இவர்கள் பட்டியல் இடுவார்கள்.
http://www.copyscape.com/

உங்கள் சிந்தனையும் திருடப்படலாம். உஷார்................

உன் முடிவு உன் கையில்

எது வேண்டும் உங்களுக்கு. இதுவா
இது வேண்டாமா
சரி.... உங்க விருப்பம்

இதுவா

ரொம்ப காஸ்ட்லி மர்திரி தெரியுது.அப்பா இதுவும் வேண்டாமா

சரி சரி ... என்ன பன்றது பொறுமையாகத்தான் இருக்கனும்



இது வேணுமா சும்மா ஜாலிய இருக்கும் எங்களுக்கு....

வேண்டாமா

சரி அப்ப இன்னும் ஒன்னே ஒன்னு தான் இருக்கு
என்னது அது
என்னது அது
என்னது அது
.
.
.
.
என்னோட அடுத்த பதிவு என்ன சரியா............................. ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல.................

October 19, 2008

யார் அந்த நிலவு

லேசான தூறல், குளுமையான காற்று அப்படியே ரசித்துக்கிட்டு பாலா பேருந்து நிறுத்தத்தில வந்து நின்னா சிறிது நேரத்தில் அவனோட காலுகிட்ட ஒரு சின்ன குட்டி நாய் அவன வம்முக்கு இழுக்கிற மாதிரி அவனோட கால சுத்தி விளையாடிச்சு. அவன் தன்னோட பையில இருந்து ஓர் ரொட்டியை எடுத்து அதுக்கு போட்டான். நாம்மோட பைக் மட்டும் இப்ப ஒழுங்க்க இருந்திருந்த நாம இப்படி இங்க நின்கிட்டு இருந்திருபோமா மெக்கானிக் வேற பைக் சரியாக இன்னும் ரெண்டு நாள் ஆகும் என்று சொல்றாரு என்று நினைத்துக்கொண்டு எப்ப பஸ் வரும்னு தெரியல என்று மனசுக்குள்ள புலம்பிக்கிட்டு இருந்தான். கொஞ்ச துரத்தில யாரோ ஓடிவருவது மாதிரி இருக்கு என்று பார்த்தால் ஒரு முழு நிலவு மழையில் நனைந்துகொண்டே மெதுவாக ஓடிவந்து அவன் பக்கத்தில் நின்ற அவள் 7 மணி பஸ் போயிடுச்சா என்று அவனிடம் கேட்டால் ஒருசி வினாடிகள் என்றாலும் அவளது விழிகளால் ஸ்தம்பித்து போன அவனது இதயம் அவளது கேள்விக்கு இல்லை என்று சொல்லவே பல வினாடிகள் ஆனது. அவனோட ஸ்கூல், காலேஜ் நாட்களில் தன்னுடன் படித்த தோழிகளிடம் பேசி, பழகி இருக்கிறான் ஆனா இந்த நிமிடங்கள் போல் எந்த நிமிடமும் இருந்தது இல்லை ஏதோ பல வருடங்கள் பழகி பிரிந்த ஒருவரை மீண்டும் சந்தித்தது போன்ற ஓன்று அவள் என்னிடம் பேசிய ஒரு சில வினாடிகளிலேயே நிகழ்ந்தது. பக்கத்து டி கடையில் உள்ள வானொலியில் இருந்து ஒரு பாடல் "பனி விழும் இரவு நனைந்தது நிலவு......" . சிறிது நேரத்தில் பேருந்தும் வந்தது. டிரைவருக்கு பின்னால் உள்ள இருக்கையில் அவனும். அருகாமையில் நேர் எதிர் வரிசையில் அவளும் அமர்ந்து இருந்தாள். அந்த மழலை பூ மழையின் தூறலில் விளையாடிக்கொண்டு இருந்ததை ரசித்து கொண்டு இருந்தான் அவன் சட்டேன்று திரும்பிய அந்த பூ மெல்லிய புன்னகையால் மீண்டும் அவனது விழிகளை முற்றுகை இட்டுவிட்டு மீண்டும் அந்த பூ விளையாட ஆரம்பித்தது. பேருந்தில் இருந்து வந்த இந்த ("ஒரு நாள் உன்னை விழிகள் பார்க்க, இது யார் என்று இமைகள் கேட்க, இவள் தான் உன் இதயம் என்றது காதல்") பாடல் வரிகள் அவனது இதயத்தை காற்றில் பறக்க விட்டது. பேருந்து நிலையம் வந்தது அனைவரும் பேருந்தில் இருந்து இறங்கி சென்றனர் அவனது நிழல் மட்டும் அவளுடன் சென்றது.அவனோ நடைபிணமாய் நடந்து சென்றான்........................


யார் அந்த நிலவு
எங்கிருந்து வந்தால்
ஏன் என்னை மட்டும் விட்டு சென்றாள்
என் இதயத்தையும் அல்லவா சிறைபிடித்தாள்
வினாடிகளில் நிகழ்ந்த விபத்தல்லவா.........................

October 17, 2008

தியோடோர் பெட் பார்ட்னராக மாறிய கதை

அமெரிக்க அதிபர் தியோடோர் ரூஸ்வெல்ட் பெரிய வேட்டைக்காரர் வேட்டையாட கிளம்பினார் எதையாவது வேட்டையாடம திரும்ப மாட்டாரு.
கரடியை வேட்டையாடுவது கவுரவமாக கருத பட்ட காலமா அது. அவரோட கெட்ட நேரமா இல்ல கரடியோட நல்ல நேரமானு தெரியல மூன்று நாட்கள் அலைந்து திரிந்தும் ஒரு கரடி கூட கிடைக்கவில்லை. எல்லா கரடியையும் சுட்ட எங்குட்டு இருந்து கரடி வரும் அதானால மனுஷன் இன்னிக்கி வேட்டை இப்படி வெத்து துப்பாக்கி மாதிரி போச்சு என்று ரொம்ப பீல் பண்ணுனாரு..... நெசமா..............................
அப்பறம் அவரோட படை (சொறி, சிரங்கு) காட்டை சல்லடை மாதிரி சலிச்சு காட்டுக்குள்ள சும்மா படுத்து கிடந்த ஒரு வயசான கரடியை கட்டி தர தர என்று இழுத்து வந்தார்கள் ரூஸ்வெல்ட் சுடுவதர்க்காக ஆனால் கரடியின் பரிதாப நிலையினை கண்ட ரூஸ்வெல்ட் அதை சுடவில்லை மேலும் அதை விட்டுவிடுங்கள் என்று கூறினார்.
இந்த சம்பவத்தை கேள்வி பட்ட, கிளிபோர்ட் பெரிமென் என்ற கார்டூனிஸ்ட், கழுத்தில் கயிறு கட்டப்பட்ட கரடி ஒன்றை ஒருவர் பிடித்து கொண்டு இருப்பது போலவும், ரூஸ்வெல்ட் அதனை சுட மறுப்பது போலவும் கார்டூன் ஒன்றை வரைந்தார். அது வாசிங்டன் என்ற பத்திரிக்கையில் வெளியானது. மறுநாள் வேறொரு பத்திரிகையில் வெளியான இந்த கார்டூனில் கரடி மிக சிறியதாகவும் மேலும் பயத்தில் நடுங்கிக்கொண்டு இருப்பது போலவும் இருந்தது.இந்த கார்டூனை மக்கள் வெகுவாக ரசித்தார்கள்.


மோரிஸ் மைக்டாம் என்பவரும் ரசித்தார் ஆனால் வித்தியாசமாக பட்டு துணி வைத்து கரடி பொம்மை செய்யும் அளவிற்கு. தான் செய்த கரடி பொம்மையை சாக்லட், பொம்மை விற்கும் தன்னுடைய கடையில் கார்டூன் உடன் சேர்த்து வைத்தார். இதை பார்த்த மக்கள் கரடி பொம்மை வாங்கினார்கள் மேலும் மேலும் மோரிஸ்க்கு கரடி பொம்மை ஆர்டர் வர துவங்கியது.

மோரிஸ் மைக்டாம் ரூஸ்வெல்ட்க்கு ஒரு கடிதம் எழுதினார் அதில் அவர் உருவாக்கிய கரடி பொம்மைக்கு தியோடோர் ரூஸ்வெல்ட் பெயரை வைக்க விருப்பபடுவதாக தெரிவித்தார். ரூஸ்வெல்டும் தனக்கு எந்த ஆட்சபனையும் இல்லை என்று கடிதத்திற்கு பதில் அனுப்பினார்.
மோரிஸ் தியோடோர் (theodore) என்பதை சுருக்கி "டெட்டி பியர்" (Teddy Bear) என பெயரிட்டு விற்பனை செய்தார். இன்று வரை பலரது "பெட் பார்ட்னராக" இருப்பது இந்த "கெட்டி பீர்" அய்யா மனிசுடுங்க "டெட்டி பியராக" (super figura) இருப்பது இந்த கரடி பொம்மை தான்.

வாய்ப்புகள்

வாய்ப்புகள் ஒவ்வொரு விநாடியும் உங்களுக்கு தன்னை வெளிபடுத்தி கொண்டுதான் இருக்கின்றது.ஆனால் இது தான் வாய்ப்பு என்று தெரியாமலேயே நாம் தவற விட்டு கொண்டு இருக்கிறோம். திறந்திருக்கும் வாய்ப்புகளை விடுத்து திறக்கப்படாத வாய்ப்புகளை நோக்கி ஏங்கி நிற்கின்றோம்.

லினக்ஸின் அடுத்த வெற்றி படை Freespire

கணிபொறி உலகமே Open Source க்கு மாறி கொண்டு இருக்கின்றது. வரும்காலத்தில் நம் நடை, தோற்றம், பண்பு போன்றவற்றையும் நிஜமாகவே open source முலமா க மாற்றிவிடுவார்கள் போல தெரிகிறது. விண்டோசைமெல்ல மெல்ல வென்று கொண்டுருக்கும்லினக்ஸின் அடுத்த வெற்றி படை Freespire வந்துவிட்டது.
யாராவது கணிபொறி துறையில் என்ன தெரியும் என்று கேட்டால் விண்டோஸ் என்று சொல்லும் அளவிற்கு விண்டோஸ் பயன்படுத்துவது மக்கள் மனதில் விதைக்க பட்டுவிட்டது. என்னதான் லினக்ஸ் ஆயிரம் வசதிகளையும், பாதுகாப்பையும் கொடுத்தாலும் சின்ன சாளரத்தின் (windows) வழியாக உலகை பார்த்த மக்களுக்கு லினக்ஸின் பயன்பாட்டை சரிவர பயன்படுத்த வசதியாக இல்லை என்றுதான் சொல்லணும்.

அதனால தான் லினக்ஸ் பயனாளர்களுக்கு லினக்ஸின் மேம்பட்ட பதிப்புகளில் வசதியான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் விண்டோஸ் லினக்ஸ் இணைந்த புதிய லிண்டோஸ் (lindows) உருவாக்கப்பட்டது ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக பிரபல்யம் ஆகவில்லை. இப்போது புதிய பரிணாமமாக FREESPIRE அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
கவிதை
வார்த்தைகள் இல்லாத கவிதை மவுனம் சொல்லப்படாத வார்த்தை சோகம்
அளவிட முடியாத உலகம் கனவு
முடிவற்றது ஆன்மா தேடப்படுவது மனது
விரும்பி பெற நினைப்பது மழலை பருவம் .........................


அய்யா 10நாள் சாப்பாடு போடாம கூட இருங்க ஆனா தயவு செய்து இதெல்லாம் ஒரு கவிதை எழுத சொல்லாதீங்க.

போதாதற்கு என் அழகான படத்தை வேற போட்டுருக்காங்க.
ப்ரண்ட் என்ட் பேக் என்ட்- ( Front End and Back End)

கம்ப்யூட்டர் புரோக்ராம் துறையில் ப்ரண்ட் என்ட் பேக் என்ட் - (Front End and Back End) முக்கியமான ஓன்று. எடுத்துக்காட்டாக நாம் ஒரு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கைக்கான ஒரு புரோக்ராம் எழுதுகிறோம் என்றால். அந்த புரோக்ராமில் மாணவர்களின் விபரங்களை கேட்டு பெரும் புரோக்ராமை எழுதுவதற்கு உதவும் விசுவல் பேசிக்(Visual Basic) போன்ற மென்பொருளை ப்ரண்ட் என்ட் எனவும் மாணவர்களின் விபரங்களை சேமிக்க உதவும் எம் எஸ் அக்சஸ், ஆரக்கிள் [Ms-Access(Application Development Tool) & Oracle(RDBMS)] போன்றவைகளை பேக் என்ட் என கூறுகிறோம்.சுருக்கமாக நம்மை பற்றிய விபரங்களை பெறுவது ப்ரண்ட் என்ட் விபராங்களை சேமித்து வைப்பது பேக் என்ட்.
Result For
GOVERNMENT TECHNICAL EXAMINATION IN
COMMERCE SUBJECTS
AUGUST 2008

காலம் உங்கள் காலடியில் (Kaalam Ungal Kaaladiyil)

நேர நிர்வாகத்தை எளிய தமிழில் சொல்லித் தருகிற (Ebook)இந்நூல், தமிழில் (tamil) ஒரு புதுவிதமான எழுத்துமுறையை அறிமுகப்படுத்துகிறது. சுயமுன்னேற்றக் (selfdevelopement) கட்டுரைகள் அடங்கியது என்றாலும் ஒரு புனைகதை நூலுக்குரிய விறுவிறுப்பும் வேகமும் கொண்ட மொழியில் எழுதப்பட்டது. ஆசிரியர் சோம. வள்ளியப்பன், தமிழகத்தின் முக்கியமானதொரு மேனேஜ்மெண்ட் குரு.


நமது லட்சியம் உழைப்பு எத்தனை சிறப்பானவையாக இருந்தாலும் வெற்றியின் சூட்சுமம், நேரத்தை (time) எத்தனை சிறப்பாக பயன்படுத்துகிறோம் என்பதில்தான் ஒளிந்துஇருக்கிறது.

மேலும் விபரங்களுக்கு ................. http://nhm.in/printedbook/11/Kaalam%20Ungal%20Kaaladiyil

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...