November 12, 2016

வங்கிகளில் 4122 சிறப்பு அதிகாரி பணி: ஐபீபிஎஸ் அறிவிப்பு

இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி போன்ற 20 அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏற்பட்டுள்ள பணியிடங்களுக்கான பொது எழுத்துத் தேர்வினை ஐ.பி.பி.எஸ். என்ற நிறுவனம் வருடத்திற்கு இரண்டு முறை நடத்துகிறது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள ஆண்கள், பெண்கள் பயன்பெறும் வகையில் ஐபீபிஎஸ் நிறுவனம் 2016 -ஆம் ஆண்டிற்கான 4122 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 4,122
பணி - காலியிடங்கள் விவரம்:  
பணி: I.T. Officer (Scale-I) - 335
பணி: Agricultural Field Officer (Scale I) - 2580
பணி: Rajbhasha Adhikari (Scale I) - 65
பணி: Law Officer (Scale I) - 115
பணி: HR/Personnel Officer (Scale I) - 81
பணி: Marketing Officer (Scale I) - 946
வயதுவரம்பு: இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 01.11.2016 தேதியின்படி 20 வயதுக்கு குறையாமலும், 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித் தகுதி: குறைந்தபட்ச கல்வித் தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனை 16.11.2016 முதல் 02.12.2016 தேதிக்குள் ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.12.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ibps.in/wp-content/uploads/Detail_Advt_CWE_SPL_VI_2016.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து படித்து அறிந்து கொள்ளலாம்.
-->

November 7, 2016

பட்டதாரிகளுக்கு ரிசர்வ் வங்கியில் 610 உதவியாளர் பணி(28.11.2016)

இந்திய ரிசர்வு வங்கியில் 2016 -ஆம் ஆண்டிற்கான 610 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 610
பணி: “Assistant”
பணி இடம்: இந்தியா முழுவதும்
தகுதி: 50 சதவீகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள் விவரம்:      
1. அகமதாபாத் - 30
2. பெங்களூர் - 35
3. போபால் - 40
4. புவனேஸ்வர் - 20
5. சண்டிகர் - 38
6. சென்னை - 25
7. கவுகாத்தி - 27
8. ஹைதராபாத் - 31
9. ஜெய்ப்பூர் - 20
10. ஜம்மு - 10
11. கான்பூர் மற்றும் லக்னோ - 52
12. கொல்கத்தா - 35
13. மும்பை - 150
14. நாக்பூர் - 20
15. புது தில்லி - 25
16. பாட்னா - 22
17. திருவனந்தபுரம் & கொச்சி - 30
சம்பளம்: மாதம் ரூ.13,150 - 34,990
வயதுவரம்பு: 08.11.2016 தேதியின்படி 20 - 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: முதன்மை, முதல்நிலை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.450. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.50.
ஆன்லைனில் விண்ணப்ப, கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 28.11.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://indiajobvacancy.com/wp-content/uploads/2016/11/RBI-610-Assistant-Official-Notification-PDF.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
-->

November 1, 2016

கூடங்குளம் அணுமின் கழகத்தில் 56 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் இந்திய அணுமின் கழகத்தில் நிரப்பப்பட உள்ள 56 சுருக்கெழுத்தாளர், அசிஸ்டென்ட் கிரேடு-1 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 56
பணியிடம்: திருநெல்வேலி
பணி மற்றும் காலியிடங்கள்:
பணி: Assistant Grade-1 (Human Resources) - 16
பணி: Assistant Grade-1 (Finance & Accounts) - 08
பணி: Assistant Grade-1 (Contracts & Materials Management) - 16
பணி: Steno Grade -1 - 16
வயதுவரம்பு: 31.12.2016 தேதியின்படி 21-28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,500
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
“Manager (HRM), Recruitment Section, Kudankulam PO, Radhapuram Taluk, Tirunelveli Dist, Tamil Nadu – 627 106”.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.12.2016
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜனவரி, பிப்ரவரி 2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://indiajobvacancy.com/wp-content/uploads/2016/10/NPCIL-Assistant-Steno-Notification-Application-Form-2016.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளவும்.
-->

ஆவின் நிறுவனத்தில் மேலாளர் பணி

சேலம் ஆவின் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Manager (Accounts) - 01
பணி: Manager (Civil) - 01
பணி: Manager (Veterinary) - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.47,000
தகுதி: பட்டம், சிஏ, ஐசிடெபிள்யூ, பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் மற்றும் கால்நடை அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,700
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விரங்கள் அறிய http://www.aavinmilk.com/slmhr20.html என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
-->

தேசிய சிறுதொழில் கழகத்தில் பணி

தேசிய சிறுதொழில் கழகம் லிமிடெட் எனப்படும் National Small Industries Corporation Limited (NSIC) நிறுவனத்தில் 2016-ஆம் ஆண்டிற்கான ஒப்பந்த கால அடிப்படையில் 15 Executive Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nsic.co.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
மொத்த காலியிடங்கள்: 15
பணி இடம்: இந்தியா முழுவதும்
பணி: Executive Assistant - 15
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் கணினித் துறையில்  1 ஆண்டு டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,360 + பயணப்படி மாதம் ரூ.2,500
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடை தேதி: 15.11.2016
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: டிசம்பர் 2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nsic.co.in/careers/detailedadv102016.pdf என்ற லிங்கை கிளிக் தெரிந்துகொள்ளவும்.
-->

தேசிய வீட்டுவசதி வங்கியில் பணி

தேசிய வீட்டு வசதி வங்கியில் (National Housing Bank -NHB) 2016-ஆம் ஆண்டிற்கான 18 உதவி மேலாளர், நிதியியல் அதிகாரி போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 18
பணி இடம்: தில்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, அகமதாபாத் மற்றும் போபால்.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Manager (AM) - JMG Scale - I  - 01
சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020
பணி: Assistant General Manager (AGM) - SMG Scale V - 02
சம்பளம்: மாதம் ரூ.59,170 - 66070
பணி: Deputy General Manager (DGM) - TEG Scale VI - 01
சம்பளம்: மாதம் ரூ.68680 - 76520
பணி: Chief Finance Officer (CFO) - TEG Scale VII - 01
சம்பளம்: மாதம் ரூ.76,520 - 85,000
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுவாக 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம், முதுகலை பட்டம் மற்றும் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அல்லது குழு விவாதம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.50
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.11.2016
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: டிசம்பர் 2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nhb.org.in/Recruitment/Assistant-Manager_Advertisement-Ver-1.8-Website-Upload.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
-->

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...