March 24, 2016

நபார்டு வங்கி - விரைந்து விண்ணப்பித்திடுங்கள்!

அனைவராலும் நபார்டு வங்கி என அழைக்கப்படும் வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு தேசிய வங்கியில் கிரேடு 'ஏ' மற்றும் 'பி' பணியிடங்களான உதவி மேலாளர், மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவி மேலாளர்கள் (கிரேடு 'ஏ')
காலியிடங்கள்: 100
வயது வரம்பு: 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: மேலாளர் (கிரேடு 'பி')
காலியிடங்கள்: 15
வயது வரம்பு: 25 - 35க்குள் இருக்க வேண்டும். SC, ST, OBC, PWD, முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: விவசாயம், கால்நடை அறிவியல், கால்நடை கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால் தொழில்நுட்பம், தோட்டக்கலை போன்ற பிரிவுகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மற்றும் சிஏ, ஏசிஎஸ் முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: கிரேடு 'ஏ' பணியிடங்களுக்கு ரூ.650 + 100  = 750, கிரேடு 'பி' பணியிடங்களுக்கு ரூ.750 + 100 = ரூ.850. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். SC, ST, PWD போன்ற பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.nabard.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.04.2016
ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 28.04.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nabard.org/pdf/AM_RDBS_MANAGER_RDBS_ENG.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
-->

March 11, 2016

ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி

ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில் 137 பாதுகாப்பு முகவர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது இதற்கு ஏப்ரல் 4 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பணி: வாடிக்கையாளர் முகவர் அல்லது பாதுகாப்பு முகவர் (Customer Agent or Security Agent)
காலியிடங்கள்: 137
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவதொரு துறையில் பட்டத்துடன் கணினி செயல்பாடுகள் குறித்த அறிவு மற்றும் ஆங்கிலத்தில் நன்றாக உரையாடும் திறனும் மற்றும் உள்ளூர் மற்றும் ஹிந்தி மொழிகளின் அறிவு பெற்றிருப்பது விரும்பத்தக்கதாகும்.
வயதுவரம்பு: 01.03.2016 தேதயின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.14,180
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500. இதனை மும்பையில் மாற்றத்தக்க வகையில் “Air India Air Transport Services Ltd என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Air India Staff Housing Old Colony Ground, Kalina, Santa Cruz (E), Mumbai 400 029 
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 04.04.2016 அன்ரு காலை 8 மணி முதல் 11 மணி வரை
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.airindia.in/writereaddata/Portal/career/261_1_Advt-SA-BOM-March-2016.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
-->

எல்லை பாதுகாப்பு படையில் 570 ஆய்வாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 570 ஆய்வாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Indi Tibetan Border Police (ITBP)
மொத்த காலியிடங்கள்: 570
பணி இடம்: தில்லி
பணி: ஆய்வாளர் (Inspector)
வயதுவரம்பு: 21.03.2016 தேதியின்படி 52க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://itbpolice.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் சுய சான்று செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Sr.Admn.Officer (Estt),
Directorate General, ITBP, MHAGovt. of India,
Block-2, CGo Complex, Lodhi Road, New Delhi - 110003
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://itbpolice.nic.in/eKiosk/writeReadData/RectAd/200003060847.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
-->

March 9, 2016

டிப்ளமோ முடித்தவர்களுக்கு தமிழக அரசில் பணி

பணி: Tester
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800
தகுதி: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் அல்லது டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.06.2016 தேதியில் 18-வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
பணி: Assistant Tester
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800
தகுதி: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் அல்லது டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.06.2016 தேதியில் 18-வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/- எஸ்சி,எஸ்டி,மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.03.2016
-->

தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகத்தில் 2175 பணியிடங்கள்

தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகத்தில் 2175 தொழில்நுட்ப உதவியாளர், மின்னியல், தொழில்நுடப் உதவியாளர், இயந்தரவியல், உதவி வரைவாளர், களப்பணி உதவியாளர்(பயிற்சி), சோதகர் வேதியர், இளநிலை உதவியாளர், நிர்வாகம், இளநிலை உதவியாளர் கணக்கு, இளநிலை தணிக்கையாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் தட்டச்சர் போன்ற பணிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்காக, தகுதியுள்ள உள்ளவர்களிடமிருந்து எழுத்துத்தேர்விற்கு 02.03.2016 முதல் 16.03.2016 வரை இணைய வழிமூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களும், ஆட்குறைப்பு காரணமாகவும் மற்றும் பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட அரசுத்துறையில் பணியாற்றி வேலையிழந்த பணியாளர்களும், முன்னாள் இராணுவ வீரர்களும், பட்டயப்படிப்பு மற்றும் தொழிற்பழகுனர் பயிற்சி (ஐடிஐ) பெற்று முந்தைய தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் முடித்தவர்கள் கீழ்வரும் பணியிடங்களுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
அறிவிப்பு எண்.01/2016  தேதி: 28.02.2016
அறிவிப்பு எண்.02/2016   தேதி: 29.02.2016
பணி: தொழில்நுட்ப உதவியாளர் - 500
பணி: தொழில்நுட்ப உதவியாளர், இயந்திரவியல் - 25
பணி: உதவி வரைவாளர் - 50
பணி: கள உதவியாளர் (பயிற்சி) - 900
பணி: சோதகர் வேதியர் - 100
பணி: இளநிலை உதவியாளர் (நிர்வாகம்) - 100
பணி: இளநிலை உதவியாளர் (கணக்கு) - 250
பணி: இளநிலை தணிக்கையாளர் - 900
பணி: சுருக்கெழுத்து தட்டச்சர் - 25
பணி: தட்டச்சர் - 200
வயது வரம்பு : ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுவதால் அந்தந்த பணிக்கான வயது வரம்பை இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும். 01.07.2015 தேதியின்படி கணக்கிடப்படுகிறது.
தகுதி: பொறியியில் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் அல்லது இன்ஸ்ட்ரூமென்டேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, மெக்கானிக்கல், கைவினைஞர் சான்று வரைவாளர் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ, வேதியியல் துறையில் பி.ஏ., பி,எஸ்சி, பி.காம், மின்னியல், கம்பியாளர் பிரிவில் ஐடிஐ மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினரும் ரூ.500. ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ரூ.250, அனைத்து பிரிவினை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு - 250
விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 07.03.2016
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.03.2016
தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 23.03.2016
தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம்: ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது (உத்தேசமாக). இதற்கான தேதி பின்னர் www.tangedco.directrecuitment.in  என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tangedco.directrecuitment.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

March 7, 2016

பவர் கிரிட் கார்ப்பரேஷனில் பல்வேறு பணியிடங்கள்

மத்திய மின்பகிர்வு பயனீட்டு நிறுவனத்தின் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் காலியாக உள்ள டிப்ளமோ டிரெய்னி மற்றும் ஜூனியர் ஆபிசர் டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: டிப்ளமோ டிரெய்னி (எலக்ட்ரிக்கல்) - 43
பணி: ஜூனியர் ஆபிசர் டிரெய்னி (எச்.ஆர்) - 04.
பணி: அசிஸ்டென்ட் - எப் அண்டு ஏ. - 04.
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விரங்கள் அறிய இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.powergridindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.03.3016
மேலும் முழுமையான விரங்கள் அறிய www.powergridindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
-->

உணவு தொழிற்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் சயின்டிஸ்ட் பணி

சென்னையில் செயல்பட்டு வரும் உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.Rec 52/2016
பணி: Scientist Gr.IV
மொத்த காலியிடங்கள்: 20
தகுதி: Computer Science, IT, Civil Engineering பாடப்பிரிவில் BE அல்லது B.Tech.பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Chemistry, Biotechnology, Molecular Biology,Immunology
பாடப்பிரிவில் Ph.D. பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Food Science, Food Technology பாடப்பிரிவில் M.Sc. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Director. CSIR-CFTRI என்ற பெயரில் மைசூரில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.cftri.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.03.2016
-->

BANK EXAM