December 18, 2015

கோயில் புளியோதரை

மார்கழி மாதம் விடிந்தும் விடியாத விடியற்காலை வேளையில் பெருமாள் கோயிலில் தரப்படும் புளியோதரையின் சூடு, தொன்னையை மீறி கையைத் தொடும். வரிசையில் நின்று வாங்கி அதே  சூட்டோடு வாயில் போட்டதும், அந்த குளிருக்கும் அந்த நேர அநியாய பசிக்கும் அமிர்தம் என்பது இதுதான் என்றே தோன்றும். பெரும்பாலான பெருமாள் கோயில்களில் தரப்படும் புளியோதரையின் சுவையை ருசித்தவர்கள் அதனை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். வெந்தயமும் எள்ளும் கலந்த வாசனை சுவை மொட்டுகளை எக்ஸ்ட்ரா வேலை செய்ய வைக்கும். கையில் வாங்கியதும் அதன்  அற்புதமான மஞ்சள் வண்ணமும், நடுவே மின்னும் கடுகு, பருப்பு வகைகளும், மிளகாயும் எண்ணெய் மினுக்கோடு வசீகரிக்கும். வாயில் இட்டதும்  உறைக்கும் புளிப்புச் சுவை வீடு வந்து சேரும் வரை மனதிலிருக்கும். அது என்னவோ என்ன மாயமோ கோயில் பிரசாதங்களுக்கு இருக்கும் சுவையும்  வசீகரமும் வேறு எதிலும் இல்லை!

‘என்ன பெரிய புளியோதரை... கொஞ்சம் புளியை கரைச்சு கொதிக்க வெச்சு சாதத்தில கலந்தா போதாதா’ என நினைப்பவர்களுக்கு ஒரு தகவல்...  கலந்த சாதம் செய்வது ஒரு கலைதான். அதிலும் பார்த்ததும் சாப்பிட வைக்கும் விதமாக கலந்த சாதம் வருவது பெரிய வேலைதான். சாதம் உதிராக  இருக்க வேண்டும்... என்ன கலந்தாலும் எல்லா இடங்களிலும் பரவலாக இருக்க வேண்டும்... உப்பு சேர வேண்டும்... இன்னும் எவ்வளவோ சிறு சிறு  நுணுக்கமான விஷயங்கள் சேரும்போதுதான் பிரமாதமான சுவையை கொண்டுவர முடியும்.

 கோயில் புளியோதரையில் மணம், திடம், நிறம், சுவை என அனைத்துமே சிறப்பாக வரவேண்டும்தானே? சில சிறிய விஷயங்களை  கருத்தில் கொண்டு செய்து பாருங்கள்... புளியோதரை விரும்பாதவர் யாருமே இல்லை என நிரூபிக்கலாம்! கோயில் செய்முறையில் இருந்து  நிறைய முறை வேறு வகையில் செய்து பார்த்து இறுதியில் மணமான புளியோதரையை கொண்டு வந்தோம். இதே முறையில் செய்து பார்த்து சொல்லுங்க, எப்படி இருக்குன்னு!

தேவையான பொருட்கள் :

உதிராக வடித்த பச்சரிசி சாதம்    4 கப்
நல்லெண்ணெய்    2 கப்
கெட்டியாக கரைத்த புளிக்கரைசல்    3 கப்
மஞ்சள் தூள்    ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு    தேவையான அளவு
கட்டி பெருங்காயம்    20 கிராம்
கறிவேப்பிலை    சிறிது
மிளகாய் வற்றல்    2 கப்
கருப்பு எள்    ஒரு கப்
தனியா    ஒரு கப்
வெந்தயம்    அரை கப்
நிலக்கடலை    கால் கப்
உளுத்தம் பருப்பு    கால் கப்
கடலைப் பருப்பு    கால் கப்
கடுகு    2 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

சாதத்தை உதிர்த்து சிறிது எண்ணெயும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து பிசறி வைக்கவும்.
மிளகாய் வற்றல், கருப்பு எள், தனியா, வெந்தயம் ஆகியவற்றை தனியே வறுத்து இடிக்கவும். பெருங்காயத்தை எண்ணெயில் பொரித் துப் பொடித்து புளிக்கரைசலில் கலக்கவும்.
அடி கனமான கடாயில் ஒரு கப் எண்ணெய் விட்டு காய்ந்ததும் புளிக்கரைசலை விட்டு கொதிக்க வைக்கவும்.  இன்னொரு கடாயில் மீதி எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, சில மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்துக் கொதிக்கும் புளியில் கொட்டவும். உப்பும் வெல்லமும் சேர்க்கவும். இன்னும் கெட்டிப்பட்டு எண்ணெய் வெளிவர ஆரம்பித்ததும், அடுப்பை அணைக்கவும். பொடித்த பொடிகளை ஒன்றாகக் கலந்து புளிக்கரைசலின் மேல் கொட்டவும் நன்கு கிளறி சாதத்தில் தேவையான அளவு விட்டு கலக்கவும். உப்பு சிறிது சேர்க்க வேண்டும்.


  இன்றைய சிந்தானை :

உணவை வீணாக்காதீர்கள், தேவையில்லாத உணவுகளை வீனடிக்காமல் ஏழை எளிய மக்களுக்கு கொடுங்கள் அது கூட இல்லாமல் சிலர் இருக்கின்றனர்.

2 comments:

Yaathoramani.blogspot.com said...

நண்பரே அங்கே உக்கிரான அறையில்
புளியோதரைப் பிசைய ஒரு கல் இருக்கும்
அதில் பிசைய கூடுதல் சுவை வரும்.
அதுதான் கோவில் புளியோதரை சுவையின்
சூட்சுமம்.

MADURAI NETBIRD said...

அதுதான் அந்த சூட்சுமமா.அதான் அவ்வளவு சுவையாக உள்ளது.. நன்றி நண்பரே

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...