இந்திய ராணுவ அமைச்சகத்தின் கீழ் செயல்படும் விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பற்படை கப்பல் கட்டும் தளத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி நிலையத்தில் 185 ஐடிஐ முடித்தவர்களுக்கு உதவித் தொகையுடன் தொழிற் பழகுநர் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. இதில் சேர விரும்பும் ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி: Trade Apprentices
பயிற்சி காலம்: 1 ஆண்டு (2016 - 2017)
தொழில் பழகுநர் பயிற்சியளிக்கப்படும் தொழிற் பிரிவுகள் மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. எலக்ட்ரீசியன்- 35
2. எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் - 25
3. பிட்டர் - 30
4. இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் - 18
5. மெஷினிஸ்ட் - 20
6. மெக்கானிக் மெஷின் டூல் மெயின்டெனன்ஸ் (எம்எம்டிஎம்) - 06
7. பெயின்டர் (பொது) - 12
8. ரெப்ரிஜிரேசன் மற்றும் ஏர் கண்டிஷனிங் மெக்கானிக் - 18
9. வெல்டர் (கேஸ் மற்றும் எலக்ட்ரிக்) - 18.
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், சம்பந்தப்பட்ட தொழிற் பிரிவில் 65 சதவீத மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். எலக்ட்ரானிக் மெக்கானிக் தொழிற் பிரிவிற்கு ரேடியோ மற்றும் டிவி மெக்கானிக் தொழிற் பிரிவில் ஐடிஐ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment