லேசான தூறல், குளுமையான காற்று அப்படியே ரசித்துக்கிட்டு பாலா பேருந்து நிறுத்தத்தில வந்து நின்னா சிறிது நேரத்தில் அவனோட காலுகிட்ட ஒரு சின்ன குட்டி நாய் அவன வம்முக்கு இழுக்கிற மாதிரி அவனோட கால சுத்தி விளையாடிச்சு. அவன் தன்னோட பையில இருந்து ஓர் ரொட்டியை எடுத்து அதுக்கு
போட்டான். நாம்மோட பைக் மட்டும் இப்ப ஒழுங்க்க இருந்திருந்த நாம இப்படி இங்க நின்கிட்டு இருந்திருபோமா மெக்கானிக் வேற பைக் சரியாக இன்னும் ரெண்டு நாள் ஆகும் என்று சொல்றாரு என்று நினைத்துக்கொண்டு எப்ப பஸ் வரும்னு தெரியல என்று மனசுக்குள்ள புலம்பிக்கிட்டு இருந்தான். கொஞ்ச துரத்தில யாரோ ஓடிவருவது மாதிரி இருக்கு என்று பார்த்தால் ஒரு முழு நிலவு மழையில் நனைந்துகொண்டே மெதுவாக ஓடிவந்து அவன் பக்கத்தில் நின்ற அவள் 7 மணி பஸ்
போயிடுச்சா என்று அவனிடம் கேட்டால் ஒருசில வினாடிகள் என்றாலும் அவளது விழிகளால் ஸ்தம்பித்து போன அவனது இதயம் அவளது கேள்விக்கு இல்லை என்று சொல்லவே பல வினாடிகள் ஆனது. அவனோட ஸ்கூல், காலேஜ் நாட்களில் தன்னுடன் படித்த தோழிகளிடம் பேசி, பழகி இருக்கிறான் ஆனா இந்த நிமிடங்கள் போல் எந்த நிமிடமும் இருந்தது இல்லை ஏதோ பல வருடங்கள் பழகி பிரிந்த ஒருவரை மீண்டும் சந்தித்தது போன்ற ஓன்று அவள் என்னிடம் பேசிய ஒரு சில வினாடிகளிலேயே நிகழ்ந்தது. பக்கத்து டி கடையில் உள்ள வானொலியில் இருந்து ஒரு பாடல் "பனி விழும் இரவு நனைந்தது நிலவு......" . சிறிது நேரத்தில் பேருந்தும் வந்தது. டிரைவருக்கு பின்னால் உள்ள இருக்கையில் அவனும். அருகாமையில் நேர் எதிர் வரிசையில் அவளும் அமர்ந்து இருந்தாள். அந்த மழலை பூ மழையின் தூறலில் விளையாடிக்கொண்டு இருந்ததை ரசித்து கொண்டு இருந்தான் அவன் சட்டேன்று திரும்பிய அந்த பூ மெல்லிய புன்னகையால் மீண்டும் அவனது விழிகளை முற்றுகை இட்டுவிட்டு மீண்டும் அந்த பூ விளையாட ஆரம்பித்தது. பேருந்தில் இருந்து வந்த இந்த ("ஒரு நாள் உன்னை விழிகள் பார்க்க, இது யார் என்று இமைகள் கேட்க, இவள் தான் உன் இதயம் என்றது காதல்") பாடல் வரிகள் அவனது இதயத்தை காற்றில் பறக்க விட்டது. பேருந்து நிலையம் வந்தது அனைவரும் பேருந்தில் இருந்து இறங்கி சென்றனர் அவனது நிழல் மட்டும் அவளுடன் சென்றது.அவனோ நடைபிணமாய் நடந்து சென்றான்........................
யார் அந்த நிலவு
எங்கிருந்து வந்தால்
ஏன் என்னை மட்டும் விட்டு சென்றாள்
என் இதயத்தையும் அல்லவா சிறைபிடித்தாள்
வினாடிகளில் நிகழ்ந்த விபத்தல்லவா.........................
No comments:
Post a Comment