கணிபொறி உலகமே Open Source க்கு மாறி கொண்டு இருக்கின்றது. வரும்காலத்தில் நம் நடை, தோற்றம், பண்பு போன்றவற்றையும் நிஜமாகவே open source முலமா க மாற்றிவிடுவார்கள் போல தெரிகிறது. விண்டோசைமெல்ல மெல்ல வென்று கொண்டுருக்கும்லினக்ஸின் அடுத்த வெற்றி படை Freespire வந்துவிட்டது.
யாராவது கணிபொறி துறையில் என்ன தெரியும் என்று கேட்டால் விண்டோஸ் என்று சொல்லும் அளவிற்கு விண்டோஸ் பயன்படுத்துவது மக்கள் மனதில் விதைக்க பட்டுவிட்டது. என்னதான் லினக்ஸ் ஆயிரம் வசதிகளையும், பாதுகாப்பையும் கொடுத்தாலும் சின்ன சாளரத்தின் (windows) வழியாக உலகை பார்த்த மக்களுக்கு லினக்ஸின் பயன்பாட்டை சரிவர பயன்படுத்த வசதியாக இல்லை என்றுதான் சொல்லணும்.
அதனால தான் லினக்ஸ் பயனாளர்களுக்கு லினக்ஸின் மேம்பட்ட பதிப்புகளில் வசதியான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் விண்டோஸ் லினக்ஸ் இணைந்த புதிய லிண்டோஸ் (lindows) உருவாக்கப்பட்டது ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக பிரபல்யம் ஆகவில்லை. இப்போது புதிய பரிணாமமாக FREESPIRE அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment