September 17, 2009

முகவரி வங்கி


தினமும் ஆயிரக்கணக்கான இணைய தளங்களை நாம் பார்வையிடுகிறோம். அதோட தேவை கருதி வெகு சிலரே குறித்து வைப்போம். பிரச்சனைகள் , தேவை ஏற்படும் போதும் தான் தீர்வு தேடப்படும். ரெகுலராக நாம் பார்வையிடும் பிளாக் போன்ற தளங்கள் என்றால் FOLLWUP பயன்படுத்தலாம் மற்ற தளங்கள்? . அதுக்கு தான் http://www.startaid.com/இந்த தளத்துல நீங்க உங்களை பதிவு செய்த பின் உங்களுக்கு பிடித்தமான வலை தளங்களை இதுல பதிவு செய்துக்கலாம். பதிவு செய்த இந்த தளங்களின் முகவரிகள் நீங்கள் மற்ற கணினிகளிலும் இந்த இணைய தள உதவியுடன் பெற முடியும். மேலும் இந்த இணைய தளத்தை FIREFOX ADDON உபயோக படுத்தலாம்.
FIREFOX ADDON செயல் முறை
FIREFOX இன் ADDON பகுதியில் startaid என டைப் செய்து இன்ஸ்டால் செய்யவும்.
.startaid இன் லாகின் செய்து புதிய முகவரிகளை BOOKMARK செய்யவோ (அ) பழைய இணைய தள முகவரிகளை பார்க்கவோ முடியும்.

May 2, 2009

முயன்று பார்


தமிழில் எனக்கு தெரிந்த விசயங்களை வலையுலக தோழர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த வலைபூவை தமிழில் தொடங்கினேன் ஆனால் வேலைபளு காரணமாக சில மாதங்களாய் எழுத முடியல. மறுபடியும் எழுத தொடங்கிவிட்டேன்..................... இனிமே உங்கள கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.


மொசிலா எனும் இணைய உலா
வியில் இன்னும் வேகமாக பயணிக்க;
1. TYPE "about:config" என்று
அட்ரஸ் பாரில் டைப் செய்யவும்

2.I'll be careful, I Promise! என்ற பட்டனை க்ளிக் செய்யவும்
3.type network.http என்று பில்டர் பாரில் டைப் செய்யவும்

4. பின்வரும் மதிப்புகளை மாற்றவும்

"network.http.pipelining" to "true"

"network.http.proxy.pipelining" to "true"

"network.http.pipelining.maxrequests" to some number like 30.

This means it will make 30 requests at once.

5. Lastly right-click anywhere and select New-> Integer. Name it "nglayout.initialpaint.delay" and set its value to "0".
This value is the amount of time the browser waits before it acts on information it recieves.



Close and restart your browser and enjoy......

January 26, 2009

தல வரலாறு - மதுரை அழகர் மலை - பகுதி 1


இன்று அனைத்து அன்பர்களாலும் அன்பாக அழைக்கப்படும் அழகர் கோவில் எனப்படும் "அழகர் மலை" தூங்க நகரம் மற்றும் கோவில் மாநகரம் என்ற பெருமைக்குரிய மதுரையிலிருந்து வடக்கே 40 கி.மீ. தூரத்தில் இருகின்றது. கிழக்கு மேற்காக 18 கி.மீ. நீளமும் 320 மீட்டர் உயரமும் உள்ள இம்மலைக்கு "திருமாலிருஞ்சோலை , உத்யானசைலம், சோலைமலை, மாலிருங்குன்றம், இருங்குன்றம், வனகிரி" முதலிய பல பெயர்களும் உண்டு. இங்கு கோயில் கொண்டு உறைகின்ற இறைவன் "அழகர்" என்றும் வடமொழியில் "சுந்தரராஜன்" என்றும் சொல்லப்படுகின்றார். மேலும் இவரை "கள்ளழகர்" என்றும் செல்லமாக அழைப்பதுண்டு.

பாண்டிய நாட்டில் அரசாட்சி தோன்றிய முதல் அழகர் கோவிலும் அதனை அடுத்து உள்ள அழகாபுரி என்ற ஊரும் புகழ் பெற்றவையாக இருந்தன. அழகாபுரியைச் சுற்றயுள்ள கோட்டை மதிலுக்குள் அழகர் கோவிலும் அடங்கி இருக்கின்றது. இன்றும் இம்மதிலின் சிதைந்த பகுதிகள் அதன் பெருமையினை உலகுக்கு உணர்த்தி வருகின்றன.

பிரிட்டிஷ் ஆட்சியில் அழகர் கோயில்

1801- இல் மதுரையின் முதல் கலெக்டர் ஹர்டிஷ் அழகர் கோயில் தேவஸ்தான பாதுகாப்பு பொறுப்பை பெற்றார்.அவர் இந்த நிர்வாகத்தை ஒழுங்கு படுத்தினார். 1863 -இல் கோயில் நிர்வாக கமிட்டி சரிவர நிர்வாகங்களை கவனிக்கபடாததால் நிர்வாகத்தில் பல குழப்பங்களும், பிரச்சனைகளும் உருவானது. பின் 1929 -இல் ஏற்படுத்தப்பட்ட இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை இக்கோயிலின் நிர்வாக பொறுப்பை ஏற்று மிகவும் சிறப்பாக நடத்திவருகிறது .

தொடரும்............................

January 24, 2009

வெப் சைட் காப்பியர்

பெரும்பாலும் வலைத்தளங்களில் உள்ளவற்றை சேமிப்பதற்கு copy அல்லது save As கட்டளைகளையே பயன்படுத்துவோம் ஆனால் ஒரு சில வலைத்தளங்கள் நமக்கு தேவையானஅனைத்து தகவல்களையும் அளிப்பவையாக இருக்கும் பட்சத்தில் Copy அல்லது Save As கட்டளைகளை பயன்படுத்த இயலாது இந்த சூழ்நிலைகளில் நமக்கு உதவக்கூடிய மென்பொருள் தான் வெப் காப்பியர்.

இது போன்ற வெப் காப்பியர் website copier நம் கணினியில் நிறுவினால் போதும் நாம் ஆன்லைனில் இருக்கும் பொது தேவைப்படும் வலைத்தளத்தின் முகவரியை கொடுத்தால் அந்த வலைத்தளம் மற்றும் அதன் அனைத்து லிங்குகளும் ஆன்லைனில் உள்ளது போல் நமது கணினியில் சேமிக்கப்பட்டு விடும். இணையத்தில் பல வெப் காபியர்கள் உள்ளன ஆனால் ஒருசில மட்டுமே பயன்படுத்த எளிமையானதாகவும், சிறப்பானதாகவும் உள்ளது. இதோ அவற்றில் சில

1. WinHt Track

இது ஒரு சிறந்த website copier மென்பொருள் http://www.httrack.com/

2. surfoffline
http://www.surfoffline.com/

January 10, 2009

ஒளியற்ற ஒலி (தினமும் ஒரு ஜென்)


மாஸ்டத் என்ற ஒரு ஜென் மாஸ்டர் இருந்தார். அவரிடம் அலையும் மனதையும், எண்ணகளையும் ஒருநிலை படுத்துவதற்காக பல வாலிப சீடர்கள் வந்தவண்ணம்இருப்பார்கள். இவற்றை எல்லாம் தினமும் பார்த்து கொண்டு இருந்த அந்த ஜென்மாஸ்டரின் சீடரில் ஒருவன் தானும் தன் குருவிடம் அலையும் மனதை நெறிப்படுத்துவதைபற்றி தெரிந்து கொள்ள அவரிடம் கேட்டான்.


அதற்கு அந்த குரு "நீ இரண்டு கைகளால் தட்டி ஓசை எழுப்புவதை கேட்டிருப்பாய். இப்பொழுது ஒரு கை ஓசையை, நீ எனக்கு செய்து காட்டு" என்றார்.



பல முறை முயன்று இசை கருவி, காற்று, நீர் மற்றும் பல முறை தன் குருவிடம் ஒரு கை ஓசையை செய்து காட்ட முயன்று முடியவில்லை.

கடைசியாக உண்மையாக தியானத்தில் ஆழ்ந்து அனைத்து ஒலிகளையும் கடந்து ஒலிகளற்ற ஒலியை அடைந்தேன் குருவே என்றான்.



"ஒருவன் தன் உள்ளே, தியானத்தின் மூலமாக ஆழமாக செல்லும் பொழுது, சகல ஓசைகளையும் மறைந்து "ம்" மற்றும் "ஓம்" என்ற ஓசை மட்டும் தன் இருப்பு நிலையிலிருந்து, தானே கிளம்பி மேலே எழும்பும் ஓசையே "ஒரு கை ஓசை" அல்லது ஒளியற்ற ஒலி " எனப்படுவது.
- ஓசோ

January 8, 2009

தொடரும் துயரம்


வலைபூ எழுத ஆரம்பிச்ச புதுசுல அத எழுதனும் இத எழுதனும் சொல்லிக்கிட்டு ரெண்டு வாரத்துக்கு ......... 2 பதிவு எழுதினே. அப்புறம் போக போக பதிவ சிந்திச்சு எழுதவே போதும் போதும்னு.....

pkp அவர்கள் சொன்னது போல் எழுதுவது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லையின்னு மொத பதிவு எழுதும்போது தான் புரிந்தது. மற்றவர்களின் பதிவுகளை படிக்கும் போது இன்னிக்கு நாமும் ஒரு பதிவு எழுதவேண்டும் என்று சிந்தனையில் ஆயிரம் ஆயிரம் பதிவுகளுக்கான முன்னோடங்கள் மின்னும் ஆனால் பதிவு என்று வரும் பொழுது...........

அதனால தினமும் குறைந்த பட்சம் ஒரு பதிவு எழுத வேண்டும் முடிவு செய்து விட்டேன். அதனால் உங்கள் முடிவு ஏன் கையில்.

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...