மாஸ்டத் என்ற ஒரு ஜென் மாஸ்டர் இருந்தார். அவரிடம் அலையும் மனதையும், எண்ணகளையும் ஒருநிலை படுத்துவதற்காக பல வாலிப சீடர்கள் வந்தவண்ணம்இருப்பார்கள். இவற்றை எல்லாம் தினமும் பார்த்து கொண்டு இருந்த அந்த ஜென்மாஸ்டரின் சீடரில் ஒருவன் தானும் தன் குருவிடம் அலையும் மனதை நெறிப்படுத்துவதைபற்றி தெரிந்து கொள்ள அவரிடம் கேட்டான்.
அதற்கு அந்த குரு "நீ இரண்டு கைகளால் தட்டி ஓசை எழுப்புவதை கேட்டிருப்பாய். இப்பொழுது ஒரு கை ஓசையை, நீ எனக்கு செய்து காட்டு" என்றார்.
பல முறை முயன்று இசை கருவி, காற்று, நீர் மற்றும் பல முறை தன் குருவிடம் ஒரு கை ஓசையை செய்து காட்ட முயன்று முடியவில்லை.
கடைசியாக உண்மையாக தியானத்தில் ஆழ்ந்து அனைத்து ஒலிகளையும் கடந்து ஒலிகளற்ற ஒலியை அடைந்தேன் குருவே என்றான்.
"ஒருவன் தன் உள்ளே, தியானத்தின் மூலமாக ஆழமாக செல்லும் பொழுது, சகல ஓசைகளையும் மறைந்து "ம்" மற்றும் "ஓம்" என்ற ஓசை மட்டும் தன் இருப்பு நிலையிலிருந்து, தானே கிளம்பி மேலே எழும்பும் ஓசையே "ஒரு கை ஓசை" அல்லது ஒளியற்ற ஒலி " எனப்படுவது.
- ஓசோ
No comments:
Post a Comment