மருத்துவக் கல்வி இயக்ககத்துக்குள்பட்ட மருத்துவ அலுவலர்களுக்கு இணைப்
பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான பதவி உயர்வுக்கான கலந்தாய்வு சென்னையில்
டிசம்பர் 28-இல் நடைபெறவுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்தில் டிசம்பர் 28-இல் இந்தக் கலந்தாய்வு நடைபெறும்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்தில் டிசம்பர் 28-இல் இந்தக் கலந்தாய்வு நடைபெறும்.
உயிரி வேதியியல், குழந்தைகள் நலம், உடலியல் மருத்துவம்
(Physical Medicine), மகப்பேறு மருத்துவம், கதிரியக்கப் பரிசோதனை (Radio
diagnosis) ஆகிய துறைகளைச் சேர்ந்த பதவி மூப்பு பட்டியலில் உள்ளவர்கள்,
அரசு உத்தரவின்படி தாற்காலிகப் பதவி உயர்வு பெறுபவர்கள் பங்கேற்கலாம்.
இடமாறுதல்:
இதேபோன்று உடலியல் மருத்துவம், குழந்தைகள் நலம் ஆகிய துறைகளைச் சேர்ந்த
பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு
கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்தில் டிசம்பர் 28-இல்
நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.tnhealth.org என்ற இணையதளத்தில்
அறியலாம்.
No comments:
Post a Comment