இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென்னக ராணுவ பொறியியல் சேவை படையகத்தில் காலியாக உள்ள 762 Mate (Tradesman) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முத்த இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 762
மாநில வாரியான காலியிடங்கள் விவரம்:
1. மகாராஷ்டிரா, புனே கிர்கி ரேஞ்ச் மலைப் பகுதி: மேட் (டிரேட்ஸ்மேன்) - 85
2. மகாராஷ்டிரா, தியோலாலி பிரிவு: மேட் (டிரேட்ஸ்மேன்) - 172
3. கோவா, வாஸ் கோடகாமா பிரிவு: மேட் (டிரேட்ஸ்மேன்) - 20
4. தமிழ்நாடு, நீலகிரி வெலிங்டன் பிரிவு: மேட் (டிரேட்ஸ்மேன்) - 24
5. கர்நாடகா, பெங்களூர் பிரிவு: மேட் (டிரேட்ஸ்மேன்) - 162
6. கேரளா, கொச்சி, எழிமலா பிரிவு: மேட் (டிரேட்ஸ்மேன்) - 63
7. அந்தமான் நிகோ பர் தீவுகள், போர்ட் பிளேர் பிரிவு: மேட் (டிரேட்ஸ்மேன்) - 196
8. மகாராஷ்டிரா, நாக்பூர் பிரிவு: மேட் (டிரேட்ஸ்மேன்) - 40
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
வயது: 26.12.2015 தேதியின்படி 18 - 27க்குள். எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு அவர்கள் பணியாற்றிய ஆண்டுகளுக்கு ஏற்றாற்போல் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
எழுத்துத் தேர்வு: 10.04.2016
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்தவ விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு நீலகிரி மாவட்டம் வெலிங்கடன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: mes.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கணினியில் தட்டச்சு செய்து விவரங்களை தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு புதுச்சேரி விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Commander Works Engineer,
Wellington, Barracks-Post,
The Nilgiris,
Tamilnadu- 643231.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.12.2015.
No comments:
Post a Comment