December 30, 2015

புத்தாண்டு முதல் மத்திய அரசு இளநிலை பணிகளுக்கு நேர்முகத் தேர்வு ரத்து

puthiyathalaimurai
மத்திய அரசின் இளநிலை பணியிட நியமனங்களில் நேர்முக தேர்வு முறையை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனை வரும் புத்தாண்டு முதல் அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை, மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கும், அமைச்சகங்களுக்கும், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை எழுதியுள்ள கடிதத்தில் ‘‘எதிர்காலத்தில் பணியாளர் தேர்வு நடவடிக்கை விளம்பரங்கள், நேர்முக தேர்வு இன்றி வெளியிடப்பட வேண்டும் என்றும், நேர்முக தேர்வு கிடையாது என்பது அனைத்து குரூப் சி, அரசிதழ் பதிவு பெறாத குரூப் பி பிரிவுகளுக்கு, அதற்கு சமமான பிற பணியிடங்களுக்கு பொருந்தும் என்றும், அதே சமயம், திறன் அறியும் சோதனை, உடல் தகுதி சோதனை தொடரும். எனினும் இந்த சோதனைகள், தகுதி அடிப்படையில் இருக்கும். இத்தகைய சோதனைகள் மதிப்பெண்கள் அடிப்படையில் இருக்காது’’ என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனிடயே சில குறிப்பிட்ட பணிகளுக்கு நேர்முகத்தேர்வு அவசியம் என்று அமைச்சக துறைகள் கருதினால், நேர்முக தேர்வு இல்லை என்ற நடைமுறையில் இருந்து விலக்கு கேட்டு, சம்பந்தப்பட்ட அமைச்சரின் ஒப்புதலுடன் மத்திய பணியாளர், பயிற்சி துறைக்கு விரிவாக எழுத வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக ஜனவரி 7ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு அனைத்து அமைச்சங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

நன்றி புதிய தலைமுறை ................... http://www.puthiyathalaimurai.tv/no-interview-for-non-gazetted-govt-jobs-from-january-1-254827.html


logo

புதுடெல்லி,
புத்தாண்டு முதல் மத்திய அரசு இளநிலை பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து ஆகிறது. இது தொடர்பாக துறைகளுக்கும், அமைச்சகங்களுக்கும் உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு முடிவு மத்திய அரசின் இளநிலை பணியிட நியமனங்களில் நேர்முக தேர்வு முறையினை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு முடிவு எடுத்தது.
புத்தாண்டு முதல் இதை அமல்படுத்தவும் தீர்மானித்து, அறிவிப்பு வெளியிடப்பட்டது.
உத்தரவு இந்த நிலையில், இளநிலை பணியிடங்களில் நேர்முக தேர்வுகளை ஒழிப்பதற்கு 2 நாட்களுக்குள் (31–ந் தேதிக்குள்) நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கும், அமைச்சகங்களுக்கும், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை ஒரு கடிதம் எழுதி உள்ளது.
அதில், ‘‘எதிர்காலத்தில் பணியாளர் தேர்வு நடவடிக்கை விளம்பரங்கள், நேர்முக தேர்வு இன்றி வெளியிடப்பட வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.
உடல் தகுதி மேலும், ‘‘நேர்முக தேர்வு கிடையாது என்பது அனைத்து குரூப் சி, அரசிதழ் பதிவு பெறாத குரூப் பி பிரிவுகளுக்கு, அதற்கு சமமான பிற பணியிடங்களுக்கு உரித்தானது’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ‘‘திறன் அறியும் சோதனை, உடல் தகுதி சோதனை ஆகியவை நேர்முக தேர்வில் இருந்து மாறுபட்டவை. அவை தொடரும். எனினும் இந்த சோதனைகள், தகுதி அடிப்படையில் இருக்கும். இத்தகைய சோதனைகள் மதிப்பெண்கள் அடிப்படையில் இருக்காது’’ என்றும் கூறப்பட்டுள்ளது.
விலக்கு வேண்டுமானால்... ஆனால் சில குறிப்பிட்ட பணி இடங்களுக்கு நியமனத்தின் ஒரு அங்கமாக நேர்முக தேர்வு தேவை என்று அமைச்சகமோ, துறையோ கருதினால், நேர்முக தேர்வு இல்லை என்ற நடைமுறையில் இருந்து விலக்கு கேட்டு, சம்பந்தப்பட்ட மந்திரியின் ஒப்புதலுடன் மத்திய பணியாளர், பயிற்சி துறைக்கு விரிவாக எழுத வேண்டும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு குறித்த பதிலை விளக்க அறிக்கையாக அனைத்து அமைச்சகங்களும் 7–ந் தேதிக்குள் அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய பணியாளர், பயிற்சி துறை அறிவுறுத்தியபடி நடந்துகொள்ளுமாறு பொதுத்துறை நிறுவனங்களுக்கு மத்திய அரசின் பொது நிறுவனங்கள் துறை கடிதம் எழுதி உள்ளது.
எனவே புத்தாண்டு முதல், மத்திய அரசின் இளநிலை பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு ரத்தாகிறது.

நன்றி தினத்தந்தி  ..........................

http://www.dailythanthi.com/News/India/2015/12/30041016/New-YearFromCentral-governmentBachelorTasksWalkin.vpf

-->

No comments:

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...