கர்நாடக மாநிலம் பெங்களூரை
தலைமையிடமாகக் கொண்டு 5700 கிளைகளுடன் செயல்பட்டு வரும் முன்னணி
பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் 2016 ஆம் ஆண்டுக்கான ஜூனியர் மேலாண்மை
கிரேடு ஸ்கேல் -I - 36, மத்திய மேலாண்மை கிரேடு ஸ்கேல்-II - 38 சிறப்பு
அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 74
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Technical Field Officer - Electrical (JMGS-I)
காலியிடங்கள்: 14
2. Technical Field Officer - Civil (JMGS-I)
காலியிடங்கள்: 10
3. Technical Field Officer - Mechanical (JMGS-I)
காலியிடங்கள்: 06
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், சிவில்,
மெக்கானிக்கல் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக்
பட்டத்துடன் சம்மந்தப்பட்ட பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. Network Administrator (JMGS-I)
காலியிடங்கள்: 06
வயதுவரம்பு: மேற்ற பணியிடங்களுக்கு 01.11.2015 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Telecommunications, Electronics & Communication பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: JMGS-I பணியிடங்களுக்கு மாதம் ரூ.23,700 - 30,560
5. System Administrator (MMGS-II)
காலியிடங்கள்: 17
6. Database Administrator (MMGS-II)
காலியிடங்கள்: 19
தகுதி: பொறியியல் துறையில் Computer
Science, Information Technology, Electronics & Communication அல்லது
எம்சிஏ முடித்திருக்க வேண்டும்.
7. Economist (MMGS-II)
காலியிடங்கள்: 02
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் பொருளியல், புள்ளியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.11.2015 தேதியின்படி 21 - 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: MMGS-II பணியிடங்களுக்கு மாதம் ரூ.31,705 - 32,850
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.canarabank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.01.2016
No comments:
Post a Comment