என்னோட நினைவுகளில் பதிந்த தருணங்கள் அவை எனக்கு சரியா 8 வயது இருக்கும்
நாங்க இருந்தது காம்பவுண்ட் கிட்டத்தட்ட 15 குடும்பங்கள் மேல 7 வீடு - கீழ 8
வீடு. சராசரியா ஒரு வீடு 20 x 20 அளவு நீலவாகில சின்னதா சமையல் கூடம்,
சின்னதா கூடம்,குளியலறையும் கழிவறையும் பொதுதான். மின்கட்டணம் பொதுவானது
என்பதால் மிக்சி,கிரைண்டர்,தொலைக்காட்சி பெட்டி வாங்காவே கூடாது என்பது
எழுதபடாத விதி.என்னோட பொழுது போக்கு கிரிகெட்,பட்டம் விடுவது,கபடி,கில்லி
விளையாடுவதுதான் மேலும் ஞாயிற்று கிழமைகளில் எங்க காம்பவுண்ட் அருகில் உள்ள
ஒரு பெரிய வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பது , அவுங்க வீட்டில கலர் டிவி
மற்றும் வீ .சி.ஆர் அந்த நாட்களில் கலர் டிவி ஒரு பெரிய விஷயம். ஞாயிற்று
கிழமைகளில் அவுங்க விட்டில எம் ஜி ஆர் , ரஜினி படம் போடுவாங்க அப்பயும்
திருட்டு விசிடி(மன்னிக்கணும் திருட்டு கேசட் ) உண்டு .
அப்புறம்
ஒரு வழிய எங்க காம்பவுண்ட் இருக்கிறவங்க எல்லாம் ஒன்ன சேர்த்து
காம்பவுண்ட் உரிமையாளரிடம் பேசி மிக்சி,கிரைண்டர்,தொலைக்காட்சி பெட்டி
உபயோகபடுத்த அனுமதி வாங்கினாங்க.
எங்க அப்பா தொலைக்காட்சி பெட்டி
வாங்க கடைக்கு போயிருந்தாரு எனக்கும்,ஏன் சகோதரர்க்கும் ஒரே சந்தோசம் முதல்
முறையா எங்க தொலைக்காட்சி பெட்டில நிகழ்ச்சி பாக்குறத நினைச்சு. நாங்க
வாங்கின அந்த டிவி solidaire tv . அந்த மந்திர பெட்டி எங்க வீட்டுக்கு
வந்ததப்ப எனக்கு அப்படியொரு சந்தோசம்...
இப்ப லேப்டாப் , கணிபொறி,
ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் டிவி ............... நான் பயன்படுத்தினாலும் அந்த
மந்திர பெட்டியில வெள்ளி கிழமை ஒளியும் ஒலியும் பார்த்த மறக்க முடியாது.
No comments:
Post a Comment