December 24, 2015

அணுசக்தி துறையில் பணி

அணுசக்தி துறையில் 70 பாதுகாவலர் பணி 

 

இந்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் ராஜா ரமணா தொழில்நுட்ப மையத்தில் காலியாக உள்ள பாதுகாவலர் பணியிடங்களு 10, பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Security Officer/A
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ராணுவத்தில் அதிகாரியாக பணி புரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

பணி: Security Guard - II- Group C
காலியிடங்கள்: 58
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு: பொது பிரிவினருக்கு 27க்குள்ளும், எஸ்சி., எஸ்டியினருக்கு 32க்குள்ளும், ஒபிசியினருக்கு 30க்குள்ளும் இருக்க வேண்டும். ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கு அவர்கள் பணியாற்றிய ஆண்டுகளை கழித்தால் 30 வயதாக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: உடற் திறன் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: Assistant Security Officer/A பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் www.cat.gov.in/hrd/Openings/Current_Openings.html என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். Security Guard பணிக்கு ஆன்லைனிலோ அல்லது அஞ்சல் மூலமோ விண்ணப்பிக்கலாம். அஞ்சலில் விண்ணப்பிப்பவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விவரங்களை தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Assistant Personnel Officer (Recruitment),
RAJA RAMANA CENTRE FOR ADVANCED TECHNOLOGY,
P.O: CAT, INDORE- 425 013,
Madhya Pradesh.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.12.2015.
அஞ்சலில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2015.
மேலும் விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்தை பார்க்கவும்.
-->

No comments:

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...