இன்று அனைத்து அன்பர்களாலும் அன்பாக அழைக்கப்படும் அழகர் கோவில் எனப்படும் "அழகர் மலை" தூங்க நகரம் மற்றும் கோவில் மாநகரம் என்ற பெருமைக்குரிய மதுரையிலிருந்து வடக்கே 40 கி.மீ. தூரத்தில் இருகின்றது. கிழக்கு மேற்காக 18 கி.மீ. நீளமும் 320 மீட்டர் உயரமும் உள்ள இம்மலைக்கு "திருமாலிருஞ்சோலை , உத்யானசைலம், சோலைமலை, மாலிருங்குன்றம், இருங்குன்றம், வனகிரி" முதலிய பல பெயர்களும் உண்டு. இங்கு கோயில் கொண்டு உறைகின்ற இறைவன் "அழகர்" என்றும் வடமொழியில் "சுந்தரராஜன்" என்றும் சொல்லப்படுகின்றார். மேலும் இவரை "கள்ளழகர்" என்றும் செல்லமாக அழைப்பதுண்டு.
பாண்டிய நாட்டில் அரசாட்சி தோன்றிய முதல் அழகர் கோவிலும் அதனை அடுத்து உள்ள அழகாபுரி என்ற ஊரும் புகழ் பெற்றவையாக இருந்தன. அழகாபுரியைச் சுற்றயுள்ள கோட்டை மதிலுக்குள் அழகர் கோவிலும் அடங்கி இருக்கின்றது. இன்றும் இம்மதிலின் சிதைந்த பகுதிகள் அதன் பெருமையினை உலகுக்கு உணர்த்தி வருகின்றன.

பிரிட்டிஷ் ஆட்சியில் அழகர் கோயில்
1801- இல் மதுரையின் முதல் கலெக்டர் ஹர்டிஷ் அழகர் கோயில் தேவஸ்தான பாதுகாப்பு பொறுப்பை பெற்றார்.அவர் இந்த நிர்வாகத்தை ஒழுங்கு படுத்தினார். 1863 -இல் கோயில் நிர்வாக கமிட்டி சரிவர நிர்வாகங்களை கவனிக்கபடாததால் நிர்வாகத்தில் பல குழப்பங்களும், பிரச்சனைகளும் உருவானது. பின் 1929 -இல் ஏற்படுத்தப்பட்ட இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை இக்கோயிலின் நிர்வாக பொறுப்பை ஏற்று மிகவும் சிறப்பாக நடத்திவருகிறது .
தொடரும்............................