May 13, 2014

தினம் ஒரு மென்பொருள் - "டம்மி பிரிண்டர்"

அதிகாலை சரியாக 5மணி இருக்கும் பில்டர் காபியை சுவைத்து கொண்டு என்னோட அலைபேசியை எடுத்து பார்த்தா 27 missed  call அதுவும் என்னோட கோவக்கார உயிர் நண்பன் மணியிடமிருந்து, எனது அலைபேசி அதுவரை அமைதியாக இருந்துள்ளது ஆம் silent mode மாறியிருக்கு எப்படின்னு ஆராச்சி பண்ண நேரம் இல்ல.அவனோட அழைப்பு சரியாக எனக்கு இரவு 11 மணி அளவில் வந்திருக்கு மற்றும் 27 missed call இந்த குழப்பத்தோட அவன தொடர்பு கொள்ள  ,எதிர் முனையில் அவன் உனக்கெல்லாம் எதுக்கு phone என்று அலைபேசி அனல்பேசியா மாறும் அளவு என்னை காச்சு காச்சு ........... ஒரு வழிய அவன சமாதானபடுத்தி என்னடானு கேட்டா, என்னோட பிரிண்டர் ரிப்பேர் ஆச்சு, காலையில்  train அதான் டிக்கெட் பிரிண்ட் எடுக்க "டம்மி பிரிண்டர்" பத்தி நியாபகம் வந்துச்சு.அதான் உன்கிட்ட கேட்கலாம் போன் பண்ணினேன் ஆனா நீ..... நான் ஊருக்கு கிளம்பிட்டேன்.அடுத்த வாரம் நேர வந்து  "டம்மி பிரிண்டர்"  பத்தி கேட்கிறேன் சொல்லிட்டு போன வச்சுட்டான்.

இந்த மாதிரி என் தோழர் போல பிரிண்டர் இல்லாத பல தோழர்கள் irctc மற்றும் பல ஆன்லைன் வெப்சைட்ல பிரிண்ட் எடுக்க மிகவும் சிரம பட்டிருப்போம்.இந்த மாதிரி சிரமத்தை தவிர்க்கதான்  நாங்க "டம்மி பிரிண்டர்" பயன்படுத்துவோம் அதாங்க "CUTE  PDF " மென்பொருள். இந்த மென்பொருள் நார்மல் ப்ரிண்ட PDF மாத்தி கொடுத்திடும்.

1.இந்த வெப்சைட் போங்க  http://www.cutepdf.com/products/cutepdf/writer.asp

2 . free download click பண்ணுங்க  and Instal பண்ணுங்க ,

 



3. free converter பண்ணுங்க  Instal பண்ணுங்க

4.பிரிண்ட் கொடுங்க
 

5. இப்ப பிரிண்டர் டயலாக் பாக்ஸ்ல  உள்ள "cutepdfwriter"  செலக்ட் பண்ணுங்க, ok  கொடுங்க, filename  கொடுங்க  இப்ப உங்க பிரிண்ட் pdf  கோப்பா சேமிக்கப்பட்டு இருக்கும்.

 இந்த  "டம்மி பிரிண்டர்" பிரிண்டர் இல்லாதவங்களுக்கு பிரிண்டர் மாதிரி மிகவும் உதவிய இருக்கும்.







-->

1 comment:

Unknown said...

மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...