ஐந்து ஆண்டுகளில் சாலையில் ஓடும் கூகுளின் தானியங்கி கார்,Google automatic car will be run in roads after 5 years
இன்னும் ஐந்தே ஆண்டில் சாலைகளில் ஓட்டுனர் இல்லாத (driverless cars) கார்களை அறிமுகப்படுத்துவோம் என்று கூகுள் நிறுவனம் கடந்த வாரம் அறிவித்து பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.(GOOGLE CARS)
கூகுள் கடந்த சில ஆண்டுகளாக நடத்திய சோதனை ஓட்டங்களில் 11 சிறு விபத்துக்களை (மனிதர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை) சந்தித்ததாக சில வாரங்களுக்கு முன் செய்தி வெளியான பின், புதிய, குட்டியான, அழகான ஓட்டுனரில்லா கார் மாடலை கடந்த வாரம் பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது கூகுள். அதில் ஸ்டியரிங், பிரேக், ஆக்சலரேட்டர் போன்ற எதுவும் இல்லை.
மேலும் இந்த கார் சாதாரண கார்போல் இல்லாமல் இந்த கார் சிறிய அளவில் வட்ட வடிவமாக வடிவமைகப்படுள்ளது.இந்த காரில் உள்ள லேசர்,சென்சார் மற்றும் ரேடார்கள் இந்த காரின் எல்லா திசைகளிலும் உள்ள பொருட்களை கண்டுபிடிக்க வசதியாக வடிவமைகப்ப்டுள்ளது.
மேலும் இந்த கார் எலெக்ட்ரிக் பாட்டரி மூலம் இயக்கபடுகிறது.இந்த கார் உள்புற அமைப்பு முற்றிலும் உட்கார்து பயணிக்க எற்றவகையில் வடிவமைகப்ப்டுள்ளது.(THE interior that is “designed for riding, not for driving”.)
அந்த சோதனை கார், யாராவது குறுக்கே வந்தால் உடனே நின்றது. பார்க்கிங் லைட் சிகப்பில் எரிந்தால் புரிந்து கொண்டு நின்றது. சிக்னலில் சற்று முந்த நினைத்த காருக்கு வழி விட்டு காத்திருந்தது. இப்படி கூகுளின் ஆளில்லாத கார் பல ஆச்சரியங்களை நிகழ்த்தியதை பத்திரிகையாளர்கள் நேரில் பார்த்தார்கள்.
அமரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கூகுள் அடுத்த மாதம் சோதனை ஓட்டத்தில் இந்த கார்களை களமிறக்கும். நிஜ சாலைகளில். ஆனால் ஒன்று, தற்காலிகமாக ஸ்டியரிங்கும், கூடவே ஒரு நபரும் அந்த சோதனைகளில் பயணிப்பார். 'என் மகனுக்கு 11 வயதாகிறது. அவனுக்கு டிரைவிங் லைசென்ஸ் எடுக்கும் வயது வருவதற்குள் இந்த கார்களை பொதுமக்களுக்கு விற்க ஆரம்பித்து விடுவோம்' என்கிறார் கூகுள் கார் பிரிவு தலைவர் கிறிஸ் உர்ம்சன்.
This cartoon Just for comedy:
நம்ம ஊர்ல நாம இன்னும் டிரைவர் இருந்தும் டிரைவர் இல்லாத மாதிரி கார் ஓட்டுவோம்.என்ன ரைட்டா!..........................................................
No comments:
Post a Comment