August 10, 2019

காரைக்குடி CECRI-ல் பணிகள்

காரைக்குடி CECRI-ல் பணிகள்
காரைக்குடி CECRI (CSIR-CENTRAL ELECTROCHEMICAL RESEARCH INSTITUTE)-ல் நேர்முகத்தேர்வு

1.பணி: Project Assistant-II

காலியிடம்: 01

சம்பளம்:  Rs. 25,000

கல்வித்தகுதி: Chemistry பிரிவில் M.Sc., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30  வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Project Assistant-III

காலியிடம்: 01

சம்பளம்: Rs. 28,000

கல்வித்தகுதி: Metallurgical Engineering பிரிவில் M.Tech

வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Senior Research Fellow (P)

காலியிடம்: 1

சம்பளம்: Rs. 32,000

கல்வித்தகுதி: Chemistry / Physics பிரிவில் M.Sc.,

வயது: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தகுதியானவர்கள் www.cecri.res.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 13.08.2019

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

CSIR- Central Electrochemical Research Institute,

Karaikudi-630003.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://www.cecri.res.in/Portals/0/Careers/PS-10-2019_AdvtCopy.pdf

August 8, 2019

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு 2019 (TNSTC Recruitment)..!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் – கோயம்புத்தூர், தற்பொழுது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கின்றது. எனவே தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் அனைவரும், இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. குறிப்பாக இந்த அறிவிப்பு  Category – I Graduate Apprentices மற்றும் Category II Technician (Diploma) Apprentices பிரிவுகளுக்கு மொத்தம் 96காலிப்பணியிடங்கள் நிரப்பபடவுள்ளது. இந்த அறியவாய்ப்பினை டிப்ளோமா மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் NATS portal பதிவு செய்ய 19.08.2019 அன்று கடைசி தேதியாகும். அதன் பிறகு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (CBE) லிமிடெட் கோவையில் விண்ணப்பிக்க 26.08.2019 அன்று கடைசி தேதியாகும். TNSTC வேலைவாய்ப்பு அறிவிப்பு படி தேர்ந்தெடுக்கும் முறையானது குறிகிய பட்டியல் (Shortlist), மதிப்பெண்கள் பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் என்ற அடிப்படை முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்த தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பதிவு செய்த மின்னஞ்சல் ஐடி மூலம் தெரிவிக்கப்படுவார்கள்.

சரி இப்போது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய விவரங்களை இங்கு நாம் படித்தறிவோம் வாங்க..!

TNSTC வேலைவாய்ப்பு 2019 – கல்வி தகுதி:

  • Diploma / Engineering படித்தவர்கள் இந்த TNSTC வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையர்கள்.
  • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

TNSTC வேலைவாய்ப்பு 2019 (TNSTC Recruitment) – வயது தகுதி:

  • வயது தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

TNSTC வேலைவாய்ப்பு 2019 (TNSTC Recruitment) – தேர்ந்தெடுக்கும் முறை:

  • குறிகிய பட்டியல் (Shortlist), மதிப்பெண்கள் அடிப்படையில் மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் என்ற மூன்று தேர்வு முறைகள் நடைபெறும்.

விண்ணப்ப முறை:

  • ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள TNSTC Official Notification-க்கு சென்று தெளிவாக படித்து தெரிந்து கொள்ளவும்.

TNSTC வேலைவாய்ப்பு 2019 (TNSTC Recruitment) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  • boat-srp.com அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லுங்கள்.
  • அவற்றில் “Notification for engagement of Apprentices in TNSTC – COIMBATORE” என்ற விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  • விளம்பரத்தின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
  • தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • இறுதியாக உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை ஒரு print out எடுத்துக் கொள்ளவும்.

IBPS PO Exam: வங்கி வேலை


வங்கிகளில் 4 ஆயிரத்துக்கு அதிகமான புரோபேஷனரி அதிகாரிபணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். 

பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள புரோபேஷனரி அதிகாரி (Probationary Officer) 4,336 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஐபிபிஎஸ் அமைப்பு ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியிட்டது. 

முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகிய மூன்று கட்ட தேர்வுகளுக்குப் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஐபிபிஎஸ் அமைப்பின் அறிவிப்பின்படி இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்று முதல் ஆரம்பிக்கிறது. 


கீழ்க்காணும் இணைப்பை கிளிக் செய்து IBPS PO 2019 தேர்வுக்கு விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம். 
https://ibpsonline.ibps.in/crppot9jul19/ 

வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் தேர்வுகள் நவம்பர் மாதம் வரை நடக்கும். பின், 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தகுதியானவர்கள் பணி நியமனம் பெறுவார்கள். 

கீழ்க்காணும் இணைப்புகளில் தேர்வு தேதிகள் மற்றும் தேர்வுக்கான பாடங்கள் குறித்த விவரங்களைக் காணலாம். 


 IBPS PO 2019 Exam Dates 
IBPS PO 2019 Syllabus 





முக்கிய தேதிகள் 

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அவகாசம் தொடங்கும் நாள் - ஆகஸ்ட் 7, 2019 
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அவகாசம் முடியும் நாள் - ஆகஸ்ட் 28, 2019 
ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள் - ஆகஸ்ட் 28, 2019 

தேர்வுக்கு முந்தைய பயிற்சிக்கான அட்மிட் கார்டு வெளியாகும் தேதி - செப்டம்பர் 2019 
தேர்வுக்கு முந்தைய பயிற்சி நடைபெறும் தேதிகள் - செப்டம்பர் 23 - 28, 2019 

முதல்நிலை தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியாகும் தேதி - அக்டோபர் 2019
முதல்நிலை தேர்வு நடைபெறும் நாட்கள் - அக்டோபர் 12 & 13, 2019 மற்றும் 19 & 20, 2019 
முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி - அக்டோபர் / நவம்பர் 2019 

மெயின் தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியாகும் தேதி - நவம்பர் 2019 
மெயின் தேர்வு நடைபெறும் நாள் - நவம்பர் 30, 2019 
மெயின் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி - டிசம்பர் 2019 

நேர்முகத் தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியாகும் தேதி - ஜனவரி 2020 
நேர்முகத் தேர்வு நடக்கும் தேதி - ஜனவரி / பிப்ரவரி 2020 

தேகுதியானவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் தேதி - ஏப்ரல் 2020 




August 6, 2019

எல்லையோர சாலை நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

எல்லையோர சாலை நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

நாட்டின் எல்லைகளை நிர்ணயம் செய்யும் சாலை நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பரந்து விரிந்து கிடக்கும் இந்திய தேசத்தில், சாலை எல்லை பகுதிகளை ‘எல்லையோர சாலை நிறுவனம்’ தான் நிர்ணயம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் டிராப்ட்ஸ்மேன், ஹிந்தி தட்டச்சர், ஸ்டோர் சூப்பரவைசர், ரேடியோ மெக்கானிக் என காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அரசு வேலைக்கு தயாராகி வருவார்கள், இந்த பணிக்கு விண்ணப்பித்து முயற்சிக்கலாம். இதன் விபரம் பின்வருமாறு:

நிறுவனம்: எல்லையோர சாலைகள் நிறுவனம்
அமைப்பு: மத்திய அரசு
மொத்த பணிகள்: 8
மொத்த காலியிடங்கள்: 337

பதவி,காலியிடங்கள் விவரம்:
1. டிராப்ட்ஸ்மேன் – 40
2. ஹிந்தி டைப்பிஸ்ட் – 22
3. சூப்பரவைசர் ஸ்டோர்ஸ் – 37
4. ரேடியோ மெக்கானிகக் – 2
5. ஆய்வக உதவியாளர் – 1
6. வெல்டர் – 15
7. மல்டி ஸ்கில் வொர்க்கர் (மேசன்) – 215
8. மல்டி ஸ்கில் வொர்க்கர் (வெயிட்டர்) -5
மொத்தம் -337
சாலை நிறுவனத்தில் பணிக்கான விண்ணப்பம் தொடங்கும் நாள், விண்ணப்பம் முடியும் நாள் குறித்த விபரங்கள் எல்லையோர சாலை நிறுவனத்தின் இணையதளம் http://bro.gov.in என்ற பக்கத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இணையதளத்தில் இதுவரை கடைசி தேதி அறிவிக்கப்படவில்லை. இது பற்றிய விபரங்களை விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். http://bro.gov.in/WriteReadData/linkimages/1114647192-va.pdf

August 3, 2019

காந்திகிராம ஊரக நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?


காந்திகிராம ஊரக நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

 நிர்வாகம் : காந்திகிராம ஊரக நிறுவனம் மேலாண்மை : மத்திய அரசு

பணியிடம் : காந்திகிராம் பல்கலைக்கழகம், திண்டுக்கல் பணி மற்றும்

காலிப் பணியிடம்:- மூத்த ஆராய்ச்சி அலுவலர் : 1

கல்வித் தகுதி : எம்.எஸ்சி வேதியியல்

வயது வரம்பு : 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்..

 ஊதியம் : ரூ.14,000

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.ruraluniv.ac.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 04.08.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Gandhigram Rural Institute (GRI) - Deemed University, Gandhigram, Dindigul - 624 302.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/chem290719.pdf என்னும் லிங்க்கில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.





BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...