அனைவரது சிந்தனையும் திருடப்படுகிறது என்பது முற்றிலும் உண்மை தான் இதை யாரும் மறுக்க முடியாது. அனைத்து துறையிலும் நடக்கும் அவலம் இது வலைதுறையை மட்டும் அது விட்டு வைக்குமா என்ன.
படித்த, பார்த்த, கேள்விப்பட்ட மேலும் சிந்தனையில் உதித்த தகவல்களை மேலும் தேவைப்படும் இத்தகவல்களுக்கு இணையான செய்திகளை தேனிக்களை போல சேகரித்து அந்த தகவல்களுக்கு உருவம் கொடுத்து இந்த தகவல்களை தமிழ் பதிவாக மாற்றும் பொழுது அவலம் அவளமாக மாறி துறை துரையாக மாறி ஒரு பதிவை திருத்தி,இருத்தி வலை ஏற்றுவோர் ஒரு ரகம்.
இவ்வாறான பதிவுகளை காப்பி பேஸ்ட் கலாச்சார உதவியோடு கண்ணை மூடி கொண்டு தங்கள் பதிவுகளில் அப்படியே பதியம் போடுவோர் மற்றொரு ரகம்.
இது போல் உங்களது சிந்தனை எங்கு விலை போனது என்பதை இவர்கள் பட்டியல் இடுவார்கள்.
http://www.copyscape.com/
உங்கள் சிந்தனையும் திருடப்படலாம். உஷார்................
7 comments:
இன்றைய ஓபன் சோர்ஸ் யுகத்தில் காப்பி ரைட் எல்லாம் தேவையா என்பதே யோசிக்க வேண்டியது தான். ஆனால் ஒருவர் தன் படைப்பை தானாக முன்வந்து பொதுவானதாக ஆக்காதவரையில் அதை பயன்படுத்துவது தவிர்க்கப் பட வேண்டியது தான்.
உண்மை நண்பரே
நன்றி தங்கள் வருகை மற்றும் பின்னூடத்திற்கு
Thanks for the information dude.
கொஞ்சம் பயமாத்தான் இருக்கு நண்பா... எதைக் காப்பி அடிச்சு, நம்மகிட்டயே ‘நாந்தான் மொதல்ல எழுதினேன்’ன்னு சொல்லிடுவாங்களோன்னு...
நம்ம வாழ்க்கைல நடந்ததை எழுதறதுதான் பெஸ்ட் ரெமடி!
word verificationஐ எடுத்துடுங்க.
வியாபாரம் படுத்துடும்!
நன்றி ராஜா தங்கள் பின்னூடத்திற்கு ................
//word verificationஐ எடுத்துடுங்க.
வியாபாரம் படுத்துடும்!//
word verificationஐ எடுத்துட்டேன்................
நன்றி பரிசல் அவர்களே.........
அன்பின் நண்ப
காபி ரைட் தேவைப்படும் அளவுக்கு நான் இன்னும் எழுத வில்லை. இருப்பினும் கவனத்துடன், விழிப்புணர்வுடன் இருப்போம். ஆம் எப்படித் தடுப்பது - சொல்லவில்லையே !
நானும் மதுரையில் தான் இருக்கிறேன்.
நேரமிருப்பின் படியுங்களேன்.
http://cheenakay.blogspot.com/2008/10/blog-post_26.html
நன்றி நல்வாழ்த்துகள்
Post a Comment