மழை(rain) பூமித்தாய்க்கு மழலை என்னும் இயற்கை வளங்களை தரும் உயிரணு என்று சொல்வதுதான் ஏற்புடையதாகஇருக்கும். மழை அனைவருக்கும் பிடித்த மிகவும் முக்கியமான ஒன்று, இந்த மழை எவ்வாறு உருவாகிறது? வெப்பத்தின் காரணமாகக் கடல்கள்,ஏரிகள்,ஆறுகள் மற்றும் ஏனைய நீர்வழிகளில் உள்ள நீரானது திரவ நிலையில் இருந்து நீராவி நிலைக்கு மாறி காற்றில் கலந்து வான்வெளி சென்று மேகங்களாக உருவாகின்றன. இதுவே பிறகு சுத்தமான நீராக அதாவது மழையாக பெய்கிறது. இந்தநிகழ்வு சாதரணமான நிகழ்வு அல்ல. பிரபஞ்சம் (Universe) எனும் சக்தியின் திட்டமிட்ட செயல்பாடுகளில் இதுவும் ஒன்று என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் கடல் மற்றும் ஏனைய வழிகள் மூலமாக மாறும் மேகமானது அந்த இடத்தில் மட்டும் மழை பொழியவேண்டும். ஆனால், அவ்வாறு இல்லாமல் மேகமானது தண்ணீர் வண்டிபோல் நகர்ந்து சென்று மழையாகப் பொழிகிறது.இவ்வாறான, மழை சமீபமாக சரிவர பொழிவதில்லை அதற்கு காரணம் யார் ? நாம் தான். ஆம், நாமே தான் காரணம். மழைநீரை சரியாக பயன்படுத்தாதது,இயற்கை வளங்களை அழிப்பது போன்ற செயல்களால் நம்முடைய மரணத்திற்கு நாமே நாள் குறிக்கிறோம்.பூமியின் ரத்த ஓட்டமே நிலத்தடி நீர்தான், பூமியில் துளையிட்டு பூமியின் நீர்வளத்தை உபயோகிப்போம். ஆனால், நீர்வளத்தை மேம்படுத்த எந்த முயற்சியும் நாம் மேற்கொள்வதில்லை.
சீனா மற்றும் பிரேசில் நாடுகள் கூரை நீர் மழை சேகரிப்பின் மூலம் சேகரிக்கப்படும் மழைநீரை கால்நடை, சிறு பாசன நீர் ,உள்நாட்டு குடிநீர் தேவைகள் மற்றும் நிலத்தடி நீர் நிலைகளை நிரப்பவும் பயன்படுத்துகிறார்கள்.
நிலத்தடி நீர் (
Ground water) ஏன் குறைகிறது? நிலத்தடி நீரை பாதுகாப்பதில் நமது பங்கு என்ன?
1.மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நீரின் அதிகமான பயன்பாடு
2.முறையாகச் சேமிக்கப்படாத மழைநீர்
3. பிளாஸ்டிக் போன்ற நவீன நாகரிகத்தின் தாக்கம்
4.லாபத்திற்காக ஆற்று மணலை எடுத்தல் என இன்னும் பல . . . . . முறையாக மழைநீரை சேகரிபத்தின் மூலம் எதிகால சந்ததியனரை தாகம்....... தாகம்......................என்ற நிலையிலிருந்து காப்பாற்றுவோம். தங்கத்தை விடத் தண்ணீரின் விலை பத்து மடங்கு என்ற நிலை ஏற்படாமல் தவிர்ப்போம்.