+2 படிச்சு முடிச்ச நேரம் பல கல்லூரிகளிலும் விண்ணப்பம் செய்துகிட்டு இருந்த தருணம், மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் விண்ணப்பம் செய்ய போனேன், அங்குள்ள கிளெர்க் அண்ணகிட்ட போய் அண்ணே அண்ணே B.B.A-க்கு அப்பளை பண்ணனும் சொன்னே,அவரு கொஞ்சம் கோபத்தோட படிச்ச புள்ளைய இருக்க நோட்டீஸ் போர்டுல என்ன ஒட்டிருக்குனு பாருன்னு சொன்னாரு, அங்க போய் பாத்தா எனக்கு கிறுகிறுன்னு வந்துடுச்சு ஏன்னா எல்லாம் இங்க்ளிப்சுல இருந்துச்சு அதான் இங்கிலிஷ்ல, அத ஒரு பத்து தடவை படிச்சிட்டு நேர பேங்க் போய் டிடி எடுத்துட்டு வந்து அந்த கிளார்க் அண்ணே கிட்ட கொடுத்தேன் அவரு டிடி-யையும் என்னையும் கோபத்தோட பாத்துட்டு என்னத்தான் ஸ்கூல் படிச்சிங்களோ ஒரு டிடி எடுக்க தெரியாம எங்க உயிரை வாங்க வாங்கிறிங்க சொல்ல நான் கோபத்தோட டிடி தானே எடுத்திருக்கேன் சொன்னே, உடனே அவரு நல்ல டிடி எடுத்த ஏன் சர்விசுல இதுவரைக்கும் யாரும் அவங்க பேருல டிடி எடுத்தது இல்லேன்னு சொல்ல இன்னொரு கிளர்க்கு நீதான் இந்த காலேஜ் பிரின்சிபாலன்னு கேட்க ,ரிசப்சென் புல்ல ஒரே சிரிப்பு அப்பத்தான் எனக்கு புரிஞ்ச்சு பிரின்சிபாலுன்னு எடுக்காம எம் பேருல எடுத்தது.அப்புறோம் டிடி மாத்தி ஒருவழியா B.B.A படிச்சு முடிச்சேன். எந்த ஒரு டிடி எடுத்தாலும் இந்த நிகழ்வு சிரிப்பையும் கொஞ்சம் மனவருத்ததையும் தந்துடும். அனுபவம் ஒரு ஆசான் என்பது உண்மைதான்.