எலக்ட்ரிக்கல் பட்டதாரிகள் பவர் கிரிட் கார்ப்பரேஷனில் இன்ஜினியர் ஆகலாம் 15 காலியிடங்கள் அறிவிப்பு
புதுடெல்லியில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய பவர் கிரிட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் எரிசக்தி துறையின் கீழ் இயங்கி வருகிறது. இதன் கீழ் உள்ள 178 துணை மின் நிலையங்கள் மூலம் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் காலியாக உள்ள 15 இடங்களுக்கு பி.இ., பி.டெக்., அல்லது எம்.டெக்., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள்:
1. துணை மேலாளர்: (எலக்ட்ரிக்கல்): 5 இடங்கள். (பொது - 3, ஒபிசி - 2).
தகுதி:
60 சதவீத தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் பாடத்தில் பி.இ.,/ பி.டெக்.,/ பி.எஸ்சி (இன்ஜினியரிங்)/ ஏஎம்ஐஇ அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி.
வயது: 27.6.2014 அன்று 39க்குள்.
சம்பளம்: ரூ.32,990 - 58,000.
2. முதுநிலை பொறியாளர்: (எலக்ட்ரிக்கல்): 10 இடங்கள். (பொது - 7, ஒபிசி - 1, எஸ்சி - 2)
தகுதி: பவர்சிஸ்டம் அனலிசிஸ் அல்லது பவர் சிஸ்டம் இன்ஜினியரிங் பாடத்தில் எம்.டெக்., அல்லது பி.எச்டி.,
வயது: 27.6.2014 அன்று 36க்குள்,
சம்பளம்: ரூ.29,100 - 54,500.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.400. இதை 'Power Grid Corporation' என்ற பெயருக்கு புதுடெல்லியில் மாற்றத்தக்க வகையில் ஏதேனும் ஒரு வங்கியில் டிடி எடுக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி., மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பதாரர்கள் www.powergridindia.com என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:
Power Grid Corporation of India Limited,
B9, Qutab Institutional Area,
Katwariasarai,
NEWDELHI 110 016.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.6.2014.
பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 11.7.2014.
No comments:
Post a Comment