June 10, 2016

பேங்க் ஆப் இந்தியா' வங்கியில் 517 அதிகாரி பணி

'பேங்க் ஆப் இந்தியா' வங்கியில் 517 அதிகாரி பணி: 14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு பேங்க் ஆப் இந்தியா' வங்கியில் 517 கிரெடிட் ஆபீசர், மேலாளர், சீனியர் மேலாளர் உள்ளிட்ட அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள முதுகலை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்தம் காலியிடங்கள்: 517

பணி: ஆபீசர் (கிரெடிட்) - 217

பணி: மேலாளர் - 200

பணி: சீனியர் மேலாளர் - 100

வயது வரம்பு: 01.04.2016 தேதியின்படி கிரெடிட் ஆபீசர் பணிக்கு 30க்குள்ளும். மேலாளர் பணிக்கு 35க்குள்ளும், சீனியர் மேலாளர் பணிக்கு 38க்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 60 சதவீத மதிப்பெண்ணுடன் பி.காம் தேர்ச்சி பெற்று எம்.பி.ஏ., பி.ஜி.டி.பி.எம், பி.ஜி.டி.பி.ஏ., சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ. போன்றவற்றில் ஏதாவதொன்றை முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.100.

விண்ணப்பிக்கும் முறை:  www.bankofindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.06.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bankofindia.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

1 comment:

super deal said...

அனைவருக்கும் வணக்கம்

புதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .

நன்றி

நமது தளத்தை பார்க்க Superdealcoupon

BANK EXAM