Highlights
- அங்கன்வாடி மையங்களில் மாண்டிசோரி முறையில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்க தமிழக அரசு முடிவு
- இத்திட்டத்துக்காக வரும் கல்வியாண்டுக்கு ரூ.7 கோடியே 73 லட்சத்து 32 ஆயிரம் நிதி ஒதுக்கீடு
- அங்கன்வாடியில் சேரும் குழந்தைகளுக்கு நான்கு செட் சீருடை, ஒரு ஜோடி காலணி, சான்றிதழ் வழங்கப்படும்
இது தொடர்பாக சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை முதன்மைச் செயலாளர் கே. மணிவாசன் பிறப்பித்துள்ள அரசாணை பின்வருமாறு:
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பல்வேறு திட்டங்கள் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அண்மைக் காலமாக பெற்றோர் தனியார் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளில் உள்ள கட்டமைப்பு வசதிகள், வாகன வசதி, சீருடை உள்ளிட்டவற்றால் ஈர்க்கப்பட்டு தங்கள் குழந்தைகளைச் சேர்த்து வருகின்றனர். இதனால் அங்கன்வாடி மையங்களில் நான்கு முதல் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் சேருவது குறைந்து வருகிறது.
No comments:
Post a Comment