இரண்டு
தினங்களுக்கு முன்னால் லேசான மழை தூறல் தொடர நான் மாட்டுத்தாவணி பேருந்து
நிலையத்துக்கு வந்து சேர்ந்தப்ப மதியம் மணி 1:45 இருக்கும்,அன்று எனக்கும்
மற்றவர்களுக்கும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது மழை தான்
லேசான தூறல்தான் இருந்தாலும் மனசுக்குள்ள ஒரு மகிழ்ச்சி. அந்த
தூறல் தொடர மதுரை டு தேவகோட்டை பேருந்து தடத்துக்கு வந்தப்ப தேவகோட்டைக்கு
கம்பீரமா இரண்டு தனியார் பேருந்தும்,கிளம்பும் தருவாயில் அரசு பேருந்தும்
நின்னுகிட்டு இருந்துச்சு பணிநிமித்தம் காரணமா அரசு பேருந்துல பயணிக்க
வேண்டிய நிர்பந்தம்.
பக்கத்தில இருந்த தனியார் பேருந்துல பை,கைக்குட்டை,... வாங்கி நடத்துனர் பயணிகளுக்கு இடம் போட்டார் ஆனா அரசு பேருந்துல நடத்துனர் எங்கவேனாலும் உடகாந்துங்க ஓட்டுனர் இடத்த தவிரனு சொன்னாரு. ஓட்டுனர்,நடந்துனர்,நான் மற்றும் இன்னும் ஒருசில பயணிகளோட அந்த பேருந்து தன்னோட பயணத்தை தொடங்கிச்சு.நான் டிக்கெட் எடுத்தப்ப எனக்கு கிறுகிறுன்னு வந்துருச்சு தனியார் பேருந்து கட்டனத்தவிட அரசு பேருந்து கட்டணம் அதிகம்தான் ஆனா இந்த கட்டணம் அதவிட அதிகாமா இருந்துச்சு அப்புறமா தான் தெறிச்சு அது சாதா பேருந்து இல்ல சூப்பர் பாஸ்ட் அதிலேயும் பாயிண்ட் டு பாயிண்ட் எக்ஸ்பிரஸ்.வீடியோ மற்றும் ஆடியோ 5.1 போன்ற ......... எந்தவிதமான வசதியும் இல்லாத குறையை போக்க பேருந்தோட சத்தம்,கண்ணாடிய ஏத்திவிட்டு குளிர்ந்த காற்றையாவது சுவாசிப்போன்னு முடிந்தளவு முயற்சித்தேன் ஆனா கண்ணாடி கையோட வந்துருச்சுனாஅந்த பயத்தோட கண்ணாடியே இல்லாத இருக்கையா பார்த்து உட்கார்ந்தேன்.
சிறிது நேரம் அந்த லேசான சாரலும் குளிர்மையான காற்றும் இதமா இருந்துச்சு பின்பு அந்த தூறல் பலத்த மழையா பெய்தது அதுனால மறுபடியும் வேற இருக்கை மாறி உட்கார்ந்தேன்.கொஞ்ச நேரத்துல பேருந்தோட எல்லா பக்கமாவும் பேருந்தையும் எங்களையும் மழை குளுப்பாட்டியது.அப்பத்தான் நடத்துனர் சொன்ன பாயிண்ட் டு பாயிண்ட் எக்ஸ்பிரஸ் அர்த்தம் புரிந்தது. பேருந்து வளைவுகளில் வளைந்து செல்லும்போது நாம எதிர் சீட்டுக்கே பயணித்து விட்டுவரும் அனுபவம்,எந்த சன்னல் கண்ணாடி உடைந்து விழுமோ என்ற பயோத்தோட சீட்டோட விளிம்புக்கே வந்து உட்காந்துட்டேன்.பலத்த மழையில் அந்த பேருந்து மிதவை பேருந்தாவே மாறிடிச்சு.வேகம்னா வேகம் அப்படி ஒரு வேகம் எங்க பின்னாடி கிளம்பின தனியார் பேருந்து இந்த சூப்பர் பாஸ்ட் சாரி பாயிண்ட் டு பாயிண்ட் சூப்பர் எக்ஸ்பிரஸ் பேருந்த முந்திபோர அளவுக்கு. ஒருவழியா தேவகோட்டை பேருந்து நிலையத்துக்கு வந்தப்ப "வாட் எ லாங் ஜெர்னி" மனசு சொல்லிச்சு.தனியார் பேருந்து கட்டனத்தவிட அதிகமா வாங்கிறாங்க கொஞ்சம் பேருந்த பராமரிக்க கூடாதா அப்படிகிற மனவருதத்தொட என்னோட ...............

2 comments:
ரொம்பவே நியாயமான ஆதங்கம் நண்பா! இதே எரிச்சலும் கோபமும் நான் பலமுறை அடைஞ்சதுண்டு. அரசாங்கம்னாலே மெத்தனம்னு இன்னொரு பேரும் இருக்குது போலருக்கு!
பால கணேஷ் தங்கள் வருகைக்கு நன்றி தோழரே.
Post a Comment