August 19, 2013

நீதான் இந்த காலேஜ் பிரின்சிபால

+2 படிச்சு முடிச்ச நேரம் பல கல்லூரிகளிலும் விண்ணப்பம் செய்துகிட்டு இருந்த தருணம், மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் விண்ணப்பம் செய்ய போனேன், அங்குள்ள கிளெர்க் அண்ணகிட்ட போய் அண்ணே அண்ணே B.B.A-க்கு அப்பளை பண்ணனும் சொன்னே,அவரு கொஞ்சம் கோபத்தோட படிச்ச புள்ளைய இருக்க நோட்டீஸ் போர்டுல என்ன ஒட்டிருக்குனு பாருன்னு சொன்னாரு, அங்க  போய் பாத்தா எனக்கு கிறுகிறுன்னு வந்துடுச்சு ஏன்னா எல்லாம் இங்க்ளிப்சுல இருந்துச்சு அதான் இங்கிலிஷ்ல, அத ஒரு பத்து தடவை படிச்சிட்டு நேர பேங்க் போய் டிடி எடுத்துட்டு வந்து அந்த கிளார்க் அண்ணே கிட்ட கொடுத்தேன் அவரு டிடி-யையும் என்னையும் கோபத்தோட பாத்துட்டு என்னத்தான் ஸ்கூல் படிச்சிங்களோ ஒரு டிடி எடுக்க தெரியாம எங்க உயிரை வாங்க வாங்கிறிங்க சொல்ல நான் கோபத்தோட டிடி  தானே எடுத்திருக்கேன் சொன்னே, உடனே அவரு நல்ல டிடி எடுத்த ஏன் சர்விசுல இதுவரைக்கும் யாரும் அவங்க பேருல டிடி எடுத்தது இல்லேன்னு சொல்ல  இன்னொரு கிளர்க்கு நீதான் இந்த காலேஜ் பிரின்சிபாலன்னு கேட்க ,ரிசப்சென் புல்ல ஒரே  சிரிப்பு அப்பத்தான் எனக்கு புரிஞ்ச்சு பிரின்சிபாலுன்னு எடுக்காம எம்  பேருல எடுத்தது.அப்புறோம்  டிடி மாத்தி ஒருவழியா B.B.A படிச்சு முடிச்சேன். எந்த ஒரு டிடி எடுத்தாலும் இந்த நிகழ்வு சிரிப்பையும் கொஞ்சம் மனவருத்ததையும் தந்துடும். அனுபவம் ஒரு ஆசான் என்பது உண்மைதான்.

4 comments:

Yaathoramani.blogspot.com said...

இப்படிப்பட்ட நிகழ்வுகளை எப்படி
மறக்கமுடியும் ?
எல்லோருடைய வாழ்விலும் என்றும்
நினைத்து சிரிக்கக் கூடிய இதுபோன்ற
அசட்டுத்தனங்கள் உண்டு
இல்லையெனில் வாழ்வில் ஏது சுவாரஸ்யம்
மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்

Unknown said...

தமிழ் செம்மொழி ஆனப் பின்னாலும் கூட ஆங்கில பயன்பாடு குறையவில்லை ...தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் தமிழ் ஆட்சி மொழியாக வந்தால் தவிர விமோசனமில்லை !அதுவரை நீயென்ன பிரின்சிபாலா .கலெக்டரா என்ற கேள்வி கேட்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கும் !

MADURAI NETBIRD said...

தங்கள் வருகைக்கு நன்றி Bagawanjee.

MADURAI NETBIRD said...

தங்கள் வருகைக்கு நன்றி Ramani சார்

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...