August 15, 2017

ஒரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனியில் நிரப்பப்பட உள்ள 300 நிர்வாக பணியிடங்கள்

ஒரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனியில் நிரப்பப்பட உள்ள 300 நிர்வாக பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 300

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Accounts - 20
பணி: Legal - 30
பணி: Actuaries - 2
பணி: Automobile Engineers - 15
பணி: Generalists - 223
பணி: Medical Officers - 10

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 31.07.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மூலமும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:www.orientalinsurance.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2017

மேலும் விரிவான தகுதிகள், சம்பளம், அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://orientalinsurance.org.in/documents/10182/5796430/OICL+Advertisement+for+AO+2017+-+English.pdf/35ab0c1a-1c44-4ac7-a595-e64bcecd3f17 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

3247 புரோபஷனரி அதிகாரி மற்றும் மேலாண்மைப் பயிற்சி பணிகள்

தற்போது எந்த துறையில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் அறிவிக்கப்படுகிறதோ இல்லையோ, வங்கிகளில் வேலைக்கான அறிவிப்புகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் துறையாக வங்கித்துறை மாறியுள்ளது இதற்கு வங்கிகள் தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியை சரியாக பயன்படுத்தி, வங்கிப் பயன்பாட்டை அதிகரித்தும் எளிதானதாக மாற்றம் செய்து வருவதே காரணம் என கூறலாம்.

வங்கிகள் துறைகளில் இருந்து வெளிவரும் அறிவிப்புகள் இன்றைய இளைஞர்களுக்கான அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது எனலாம். இதுபோன்ற அரிய வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும்.

அலகாபாத் வங்கி, கனரா வங்கி, இந்திய வங்கி, சிண்டிகேட் வங்கி, ஆந்திரா வங்கி, மத்திய வங்கி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, யூகோ பாங்க், பாங்க் ஆப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ், யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் இந்தியா, தேனா வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி, யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, ஈசிஜிசி, பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி, விஜயா வங்கி, பாரதி மஹில வங்கி, ஐடிபிஐ வங்கி மற்றும் பிற வங்கிளுக்கான அல்லது நிதி நிறுவனங்களுக்கான ஊழியர்களை தேர்வு செய்யும் பணியை 'ஐ.பி.பி.எஸ்.,' (Institute of Banking Personnel Selection ) தேர்வாணையம் ஏற்றுள்ளது.

2011 ஆம் ஆண்டு முதல் 'கிளார்க்', 'புரபேஷனரி ஆபிசர்ஸ்', 'ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்ஸ்', கிராம வங்கிகளுக்கான 'உதவியாளர்' மற்றும் 'அதிகாரி' தேர்வுகளை நடத்தி வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2 லட்சம் பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து அன்மையில் ஆறாவது முறையாக 2017 - 18ஆம் ஆண்டுக்கான 15,332 குரூப் "ஏ" அதிகாரி மற்றும் குரூப் "பி" அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வுக்கான அறிவிப்பை ஐ.பி.பி.எஸ் வெளியிட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து 3247 புரோபஷனரி அதிகாரி மற்றும் மேலாண்மைப் பயிற்சி பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு நாளை புதன்கிழமை (ஆகஸ்ட் 16) முதல் தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 3247

பணி: Probationary Officer/ Management Trainee (PO/MT)

காலியிடங்கள் விவரம்:
1. UR    : 1738
2. OBC : 961
3. SC    : 578
4. ST     : 285

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.08.2017 தேதியின்படி 20 - 30க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் சலுகை கோருவோருக்கு சலுகைகள் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:ஆன்லைன் இரு கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.600 செலுத்தவேண்டும். இதனை ஆன்லைன் மூலமும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:http://www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க, கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 05.09.2017

ஆன்லைன் முதல் கட்ட எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2017 அக்டோபர் 07,08 மற்றும் 14, 15 தேதிகளில் நடைபெறும்.

ஆன்லைன் இரண்டாம் கட்ட எழுத்துத் தேர்வு(மெயின் தேர்வு) நடைபெறும் தேதி: 26.11.2017

மேலும் கூடுதல் விவரங்கள் அறியhttp://www.ibps.in/wp-content/uploads/Detailed_Advt_CWE_PO_VII.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Start date:16/08/2017
End date : 05/09/2017

August 8, 2017

மத்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள ஆய்வக டெக்னீசியன், உதவியாளர், மருந்தாளுநர் உள்ளிட்ட பல்வேறு பணி

மத்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள ஆய்வக டெக்னீசியன், உதவியாளர், மருந்தாளுநர் உள்ளிட்ட பல்வேறு பணிடங்களுக்கான அறிவிப்பை மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 30

பணியிடம்: மும்பை

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Staff Nurse - 20
சம்பளம்: மாதம் ரூ.21190
2. Lab Tech/Asstt - 01
சம்பளம்: மாதம் ரூ.10570
3. Pharmacist - 02
4. Radiographer - 04
சம்பளம்: மாதம் ரூ.20570
5. Health Inspector - 02
சம்பளம்: மாதம் ரூ.12190
6. Lab Suprintendent - 01
சம்பளம்: மாதம் ரூ.20570

வயதுவரம்பு: 01.08.2017 தேதியின்படி 20 - 40க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் இடம்:
14.08.2017 அன்று Staff Nurse
16.08.2018 அன்று Radiographer, Lab Suprintendent & Lab Tech ஆகிய பணியிடங்களுக்கு

"Central Railway Auditorium Auditorium Auditorium,

Parcel Building,

Between Platform No.  13 & 14,

Chhatrapati Shivaji Maharaj Terminus,

Mumbai – 400 001 யில் நடைபெறும்.

17.08.2017 அன்று Pharmacist, Health Inspector பணிக்கு

Recruitment section central railway,

Personnel branch, divisional rly. Manager’s office,

3rd floor, annex building,

Chhatrapati shivaji maharaj terminus,

Mumbai - 400 001 யில்  நடைபெறும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.cr.indianrailways.gov.in/cris/uploads/files/1501664926952-English.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

 

August 4, 2017

திருச்சூரிலுள்ள “ESAF Small Finance Bank” –ல் வேலை

திருச்சூரிலுள்ள “ESAF Small Finance Bank” –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:

பணியின் பெயர்: Sales Officer

காலியிடங்கள்: 500

கல்வித்தகுதி: இளநிலை/முதுநிலை பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Relationship Officer

காலியிடங்கள்: 500

கல்வித்தகுதி: இளநிலை/முதுநிலை பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Credit Officer

காலியிடங்கள்: 60

கல்வித்தகுதி: இளநிலை பட்டம் பெற்று 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Sales  Officer - Trainee

காலியிடங்கள்: 600

கல்வித்தகுதி: இளநிலை பட்டம் பெற்று 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்  அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட 4 பணிகளுக்குமான சம்பளம் மற்றும் வயதுவரம்பு விபரம்:

சம்பளம்: கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

வயதுவரம்பு: 1.7.2017 தேதிப்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு,குழு விவாதம் மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத்தேர்விற்கு Reasoning & Computer Aptitude, Data Analysis & Interpretation, General/Economy/Banking Awareness, English language பாடப்பிரிவுகளிலிருந்து இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள்  www.esafbank.com//careers  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி அதனுடன் அட்டெஸ்ட் செய்து தேவையான அணைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

ESAF Small Finance Bank Limited,

ESAF Centre,

Mannuthy,Thrissur,

Kerala – 680 651

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 11.8.2017

மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.esafbank.com//careers என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை - ஓட்டுநர் பணி ஆகஸ்ட் 21 கடைசி

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை - விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21 கடைசி

மத்திய தகவல்தொடர்பு துறை அமைச்சக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் அஞ்சல் துறையின் தமிழக அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள ஓட்டுநர் பணியிடங்களுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 11

பணியிடம்: தமிழ்நாடு

பணி: Staff Car Driver

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு ரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமமும் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஒபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “The Manager, Mail Motor Service, No.37 (Old No.16/1) Greams Road, Chennai - 600 006”

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.08.2017

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: செப்டம்பர், 2017 அக்டோபர் மாதங்களில் நடைபெறலாம்.

 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tamilnadupost.nic.in/rec/staffcardriverjuly2017.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

டிப்ளமோ டிரெய்னி பணி

மத்திய அரசு நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டிப்ளமோ டிரெய்னி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Diploma Trainee - (Electrical) - SDT

காலியிடங்கள்: 20

தகுதி: பொறியியல் துறையில் 70 சதவீத மதிப்பெண்களுடன் எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:  18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300/- (எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்குக் கட்டணம் இல்லை).

விண்ணப்பிக்கும் முறை:  http://www.powergridindia.com  -என்ற இணைய தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத் தேர்வு / கணினி தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவர்.  

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  10.08.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  https://www.powergridindia.com/sites/default/files/WR-I Advertisement 1-2017.pdf  என்ற இணையதள அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

 

பாரத ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணி

பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 21 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் பட்டப்படிப்பு படித்தவர்கள், எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:www.sbi.co.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.08.2017

மேலும் கூடுதல் விவரங்கள் அறிய www.sbi.co  என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 

இந்திய இராணுவத்தில்  வேலை

இந்திய இராணுவத்தில்  NCC பிரிவில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:

பணியின் பெயர்: SSC Officer (NCC Special Entry Scheme)

காலியிடங்கள்: NCC ஆண்கள்: 50, பெண்கள்: 4

வயது: 1.1.2017 தேதிப்படி 19 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: இளநிலை பட்டம் பெற்று NCC-ல் 2  வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். “B” Grade சான்று பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வானவர்களுக்கு 49 வாரங்கள் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் போது உதவித்தொகை வழங்கப்படும்.

பயிற்சி நடைபெறும் இடம்: OTA Chennai

கல்வித்தகுதியை 1.4.2017 -க்குள் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள்  www.joinindianarmy.nic.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்து கொள்ள  வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.8.2017

 

புதுதில்லியில் உள்ள ராணுவ குடியிருப்பில் நிரப்பப்பட உள்ள ஆசிரியர் பணி

புதுதில்லியில் உள்ள ராணுவ குடியிருப்பில் நிரப்பப்பட உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advt.No.: 2/2017

பணி: Assistant Teacher
காலியிடங்கள்: 34
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

பணி: Sanitary Inspector
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 20,200

விணணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.09.2017 முதல் 30.09.2017க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், விண்ணப்பிக்கும் முறை, தகுதி, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.cbdelhi.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்

+2 தகுதிக்கு இந்திய திபெத்திய எல்லைக்காவல் படையில் வேலை

இந்திய திபெத்திய எல்லைக்காவல் படையில் கான்ஸ்டபிள் தரத்திலான 303 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 303

பணி: டெய்லர்
பணி: தோட்ட பராமரிப்பாளர்
பணி: சமையல்காரர்
பணி: முடிதிருத்துனர்
பணி: சலவைக்காரர்
பணி: வாட்டர் கேரியர்
பணி: சபாய் கர்மாச்சாரி

வயது வரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பிளஸ் டூ அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.itbpolice.nic.in   என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.09.2017

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.itbpolice.nic.in  என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...