திருச்சூரிலுள்ள “ESAF Small Finance Bank” –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:
பணியின் பெயர்: Sales Officer
காலியிடங்கள்: 500
கல்வித்தகுதி: இளநிலை/முதுநிலை பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Relationship Officer
காலியிடங்கள்: 500
கல்வித்தகுதி: இளநிலை/முதுநிலை பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Credit Officer
காலியிடங்கள்: 60
கல்வித்தகுதி: இளநிலை பட்டம் பெற்று 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Sales Officer - Trainee
காலியிடங்கள்: 600
கல்வித்தகுதி: இளநிலை பட்டம் பெற்று 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட 4 பணிகளுக்குமான சம்பளம் மற்றும் வயதுவரம்பு விபரம்:
சம்பளம்: கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.
வயதுவரம்பு: 1.7.2017 தேதிப்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
எழுத்துத்தேர்வு,குழு விவாதம் மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்விற்கு Reasoning & Computer Aptitude, Data Analysis & Interpretation, General/Economy/Banking Awareness, English language பாடப்பிரிவுகளிலிருந்து இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.esafbank.com//careers என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி அதனுடன் அட்டெஸ்ட் செய்து தேவையான அணைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
ESAF Small Finance Bank Limited,
ESAF Centre,
Mannuthy,Thrissur,
Kerala – 680 651
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 11.8.2017
மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.esafbank.com//careers என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.
No comments:
Post a Comment