March 19, 2020

மத்திய அரசின் KVS பள்ளியில் அட்மிஷன் எப்போது?



Image result for school admission cartoon
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2020-21 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம், எப்போது அட்மிஷன் நடைபெறும் என்பது குறித்து KVS நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

மத்திய மனிதவளத்துறையின் ஆளுகைக்கு உட்பட்டு கேந்திரிய வித்யாலயா செயல்பட்டு வருகிறது. தனியார் மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகளைக் காட்டிலும் KVS பள்ளியில் மாணவர்கள் சேர்ப்பதற்கு எப்போதும் கடும் போட்டி நிலவும்.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் இறுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான KVS Admission Notification அறிவிக்கை வெளியாகும். அதே போல, 2020-21 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பும் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பிப்ரவரி மாதம் முடிந்து மார்ச் வந்த போதிலும், KVS Admission 2020 Notification தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், மாணவர் சேர்க்கை எப்போது நடைபெறும் என்று ஆசிரியர்கள், பெற்றோர்கள் கேள்விகள், சந்தேகங்கள் எழுப்பினர்.

இந்த சூழலில் கேந்திரிய வித்யலாயா நிர்வாகம் http://kvsangathan.nic.in/ இணையதளத்தில் KVS Admission 2020 தொடர்பான செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2020-21 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்கை வழிமுறைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், திருத்தப்பணிகள் முடிவடைந்ததும் மாணவர் சேர்கை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு (KVS Admission Official Notification 2020) வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...