அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள 186 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவி பேராசிரியர், உதவி பேராசிரியர் (சட்டம்)
காலியிடங்கள்: 186
தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் சட்டத்துறையில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் வழக்கறிஞர் பார் கவுன்சில் ஒரு வழக்கறிஞராக பதிவு செய்திருக்க வேண்டும். தேசிய தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விரிவான தகவலுக்கு இணையதள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: போட்டி எழுத்துத் தேர்வு மூலம் நேரடி நியமன அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்கள் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை வங்கி அட்டைகள் மூலம் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.trb.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் வரும் 23-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி: 06.08.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://trb.tn.nic.in/law2018/notification_law.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment