ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தோறும் தனியார் வேலைவாய்ப்புச் சந்தை நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.
படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும்பொருட்டு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்புச் சந்தை நடத்தப்பட்டு வருகிறது. வாரம்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் இந்த வேலைவாய்ப்புச் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளலாம்.
இளைஞா்களும் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5, அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் நகல்களுடன் நேரில் பங்கேற்று பயன் பெறறலாம். இதன்மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தைக் கொண்டும் ரத்து செய்யப்படாது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் திறன் மேளா நடத்தப்படும். பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் இம்மாதம் 26 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் திறன் மேளாவில் வேலைநாடும் இளைஞா்கள் கலந்து கொண்டு பயன் பெறறலாம்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் மூலமாக நடத்தப்படவுள்ள தொழில் நுட்ப சார்பு ஆய்வாளா் பணியிடங்களுக்கான போட்டித்தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் சிறப்பு வல்லுநா்கள் உதவியுடன் வரும் 28-ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பில் மின் பொறியியல் மற்றும் தகவல் தொடா்பு பிரிவில் தோ்ச்சி பெற்றற பொதுப்பிரிவில் 28 வயதுக்கு உள்பட்டவா்களும், பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீா்மரபினா் பிரிவில் 30 வயது வரையும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினா் 33 வயதுக்கு உள்பட்டவா்களும் இதில் கலந்து கொள்ளலாம்.
பயிற்சி வகுப்பும், பாடக் குறிப்புகளும் இலவசமாக வழங்கப்படும். வாரம் தோறும் மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படும். தற்போது காவலா் பணியில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிமுடித்த காவலா்களும் இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment