சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் உள்ளிட்ட 1101 காலிப்
பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும் விரப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலிப் பணியிடம் : 1101
மொத்த காலிப் பணியிடம் : 1101
அமைப்பாளர் : 316
சமையல் உதவியாளர் : 785
கல்வித் தகுதி:- அமைப்பாளர்
: 10ம் வகுப்பு தேர்ச்சி
சமையல் உதவியாளர் : 5ம்
வகுப்பு தேர்ச்சி
(எஸ்.சி, எஸ்டி
விண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பு மற்றும் கல்வித் தகுதியில் தளர்வு உண்டு) வயதுவரம்பு
: 21 வயது முதல் 40 வயதிற்கு
உட்பட்டு திறன் :
சத்துணவு சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் சத்துணவு மைய கணக்குகளை தனியே பராமரிக்கும் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்:- அமைப்பாளர்
: ரூ.7700 முதல் ரூ.24,200 வரை சமையல்
உதவியாளர் : ரூ.3000
முதல் ரூ.9000 வரை
தேர்வு முறை : பெறப்பட்ட
விண்ணப்பங்களின் தகுதிக்கு ஏற்ப தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு அழைப்பாணை அனுப்பப்படும்.
விண்ணப்பம் பெற : ஊராட்சி
ஒன்றியம், நகராட்சி
மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் விண்ணப்பத்தினைப் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : விண்ணப்பத்தினைப் பெற்ற அலுவலகத்திலேயே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 16, நேரம்
மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின் வாயிலாக இயங்கும் சேலம் அங்கன்வாடி மையங்களில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயனடையுமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment