June 15, 2015

பட்டதாரிகளுக்கு ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளார் பணி

தங்களுக்கு எங்களிடம் இருந்து  உபயோகமான தகவல்கள்(வேலை,அரசு தேர்வுகள்,தேர்விற்கான  முந்தய வருட வினாக்கள்,மேலும் பயனுள்ள தகவல்கள்) இலவசமாக வேண்டுமா. ஆம் எனில் 9952569058 இந்த அலைபேசி என்னை NETBIRD என்ற பெயரில் தங்களது அலைபேசியில் பதிவு செய்து கொள்ளவும்.பிறகு WHATSAPP ANDROID APPS  மூலமாக தங்களது பெயரை எனது அலைபேசி எண்ணிற்கு WHATSAPP மூலமாக அனுப்பவும் .

=====================================================================

பட்டதாரிகளுக்கு ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளார் பணி

======================================
மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் தொழிற்துறை வளர்ச்சி வங்கியான ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள 500 உதவி மேலாளர் பணியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 3/2015-16
பணி: Assistant Manager Grade-A
காலியிடங்கள்: 500
சம்பளம்: மாதம் ரூ.14,400 - 40,900
வயதுவரம்பு: 01.06.2015 தேதியின்படி 28-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பெங்களூரில் உள்ள Manipal School of Banking கல்லூரியில் ஒரு வருட டிப்ளமோ படிப்பிற்கு அனுமதிக்கப்படுவர். படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் பணிக்கு செய்யப்படுவார்கள்.
படிப்பின் பெயர்: Post Graduate Diploma in Banking & Finance (PGDBF)
பயிற்சி காலம்: ஒரு வருடம்
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 02.08.2015
தமிழ்நாட்டில் ஆன்லைன் எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம்:
சென்னை
மதுரை
கோவை
விண்ணப்பக் கட்டணம்: ரூ.700. SC, ST,PH பிரிவினருக்கு ரூ.150. இதனை ஐடிபிஐ வங்கியின் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.idbi.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி: 24.06.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.idbi.com/pdf/careers/Detailed_Advertisment_MGES_2015_process_IBPS_May_27.pdfஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.
-->

May 3, 2015

RECEIVE JOB ALERT FROM WHATSUP

HOW TO RECEIVE JOB ALERT and usefull message FROM my WHATS APP. JUST ADD MY NUMBER 9952569058 WITH NAME NETBIRD AND THEN SEND UR NAME SHORTLY LIKE THIS FORMAT(urname all wp) and send to my number.

கோவா கப்பல் கட்டும் தளத்தில் பல்வேறு பணி

கோவா கப்பல் கட்டும் தளத்தில் பல்வேறு பணி


By Venkatesan Sr
First Published : 01 May 2015 02:18 PM IST
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் கோவா கப்பல் கட்டும் தளத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 02/2015
துறை வாரியான காலியிடங்கள் மற்றும் கல்வித்தகுதி விவரங்கள்:
பணி:Assistant Superintendent (HR)
தகுதி: B.B.A Personnel Management/Industrial Relations/Labour Law and Labour Welfare-ல் டிப்ளமோ BSW/BA(Social Work), BA Sociology முடித்திருக்க வேண்டும். Diploma in HR/MIRPM/MBA/MSW/MSW/MHRM/LLB/BL போன்ற 2-3 வருடச முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,000 - 3% - 23,300 (S-1)
வயதுவரம்பு: 31.03.2015 தேதியின்படி பொதுப்பிரிவினருக்கு 28க்குள்ளும், ஓபிசி பிரிவினருக்கு 31க்குள்ளும் இருக்க வேண்டும்.

பணி:Junior Supervisor (Safety)
காலியிடங்கள்: 01
தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், டெக்னாலஜியில் டிப்ளமோ முடித்து தொழிற்சாலையில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Industrial Safety  இல் முழுநேர டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,000 - 3% - 23,300 (S-1)
வயதுவரம்பு: 31.03.2015 தேதியின்படி பொதுப்பிரிவினருக்கு 28க்குள்ளும், ஓபிசி பிரிவினருக்கு 31க்குள்ளும் இருக்க வேண்டும்.

பணி:Junior Supervisor (Shipwright)
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 31.03.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,000 - 3% - 23,300 (S-1)
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கப்பல் படை அல்லது ராணுவத்தில் Seaman/Mechanical Engg அல்லது அதற்கிணையான பணியில் 10 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி:Office Assistant
காலியிடங்கள்: 13
வயதுவரம்பு: 31.03.2015 தேதியின்படி பொதுப்பிரிவினருக்கு 28க்குள்ளும், ஓபிசி பிரிவினருக்கு 31க்குள்ளும் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு 33க்குள்ளும் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.6,200 - 3% - 20,270 (M-1)
தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி:Store Assistant
காலியிடங்கள்: 04
வயதுவரம்பு: 31.03.2015 தேதியின்படி பொது பிரிவினருக்கு 28க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.6,200 - 3% - 20,270 (W-3)
தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி:Store Assistant
காலியிடங்கள்: 05
வயதுவரம்பு: 31.03.2015 தேதியின்படி பொது பிரிவினருக்கு 28க்குள்ளும், ஓபிசி பிரிவினருக்கு 31க்குள்ளும் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.6,000 - 3% - 16,950 (W-3)
தகுதி: ஏதாவதொரு பட்டத்துடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஒதுக்கீட்டு காலியிடங்கள்:
பணி: Cook
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.6,000 - 3% - 16,950 (W-3)
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31.03,2015 தேதியின்படி 44க்குள் இருக்க வேண்டும்.

பணி: Office Assistant (Hindi)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.6,000 - 3% - 20,270 (M-3)
தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் இந்தி தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் வீதம் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31.03,2015 தேதியின்படி 38க்குள் இருக்க வேண்டும். 

பணி: Yard Assistant
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 31.03.2015 தேதயின்படி 38க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.6,000 - 3% - 16,950 (W-3)
தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் இந்தி தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் வீதம் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Goa Shipyard Limited என்ற பெயரில் Vasco-da-Gama, Goa-வில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: career.goashipyard.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள், டி.டி ஆகியவற்றை இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Chief General Manager (HR & A), Dr.B.R.Ambedkar Bhavan, Goa Shipyard Limited, Vascodagama, Goa -403802.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.05.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய career.goashipyard.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
-->

கனரக வாகன ஓட்டுநர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

HOW TO RECEIVE JOB ALERT and usefull message FROM my WHATS APP. JUST ADD MY NUMBER 9952569058 WITH NAME NETBIRD AND THEN SEND UR NAME SHORTLY LIKE THIS FORMAT(urname all wp) and send to my number.

கனரக வாகன ஓட்டுநர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 580 ஓட்டுநர் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கான பதிவு மூப்பு பட்டியலை சரிபார்க்க கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஓட்டுநர் பணிக்கான கல்வித்தகுதியாக 8-ஆம் வகுப்பு
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும்,கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 1.7.2015 அன்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு
35 வயதும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், இஸ்லாமியர் ஆகிய பிரிவினருக்கு 32 வயதும், இதர வகுப்பினருக்கு 30 வயதும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடத்திற்கு மாநில அளவிலான உத்தேச பதிவு மூப்பு விவரம் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. மனுதாரர்கள் தங்களது பதிவு மூப்பு விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும், பதிவு மூப்பு தேதிக்குள் தங்களது பெயர் விடுபட்டிருந்தால் வரும் 30 ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->

டி.என்.பி.சி. குரூப்- 2 தேர்வு விண்ணபிக்க

HOW TO RECEIVE JOB ALERT and usefull message FROM my WHATS APP. JUST ADD MY NUMBER 9952569058 WITH NAME NETBIRD AND THEN SEND UR NAME SHORTLY LIKE THIS FORMAT(urname all wp) and send to my number.


டி.என்.பி.சி. குரூப்- 2 தேர்வு விண்ணபிக்க

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழகத்தில் உள்ள 1241 காலி பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி.


இன்று ஏப்ரல் 30-ந்தேதி முதல் விண்ணபிக்கலாம்.

கடைசி நாள் 29-5-2015. ஆகும்.

விண்ணப்பக்கட்டணம் ரூ.125- மட்டும்.


முதல்நிலைத் தேர்வு நாள்:26.07.15
மொத்த பணியிடங்கள்: 1241.
Exam Pattern:
1.Preliminary
2.Mains
3.Interview 
வயது தகுதி பணியிடங்களுக்கு ஏற்றால்போல் மாறுபடும். 



GROUP II தேர்வு அறிவிப்பு கடைசி நாள்: 29.05.2014. முதல்நிலைத் தேர்வு நாள்:26.07.15, மொத்த பணியிடங்கள்: 1241.

Exam Pattern:
1.Preliminary
2.Mains
3.Interview

துறை வாரியான பணியிடங்கள்:

துணை வணிகவரி அலுவலர் - 8

சார்பதிவாளர் -23.


நன்னடத்தை அலுவலர் -2

உதவி ஆய்வாளர் ( தொழிலாளர் துறை ) - 11

இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் - 17+1

சிறப்பு உதவியாளர் ஊழல் (ம) கண்காணிப்பு துறை - 8

உதவி பிரிவு அலுவலர்(TNPSC) - 7

உதவி ஆய்வாளர் (உ.நி.தணிக்கை) - 78

தணிக்கை ஆய்வாளர் ( இந்து சமய அறநிலையத் துறை) - 28.

கண்காணிப்பாளர் (தொழில் மற்றும் வணிகத்துறை) - 4

கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் - 333.

இளநிலை கண்காணிப்பாளர் , வேளாண் விற்பனைக்குழு - 72.

கைத்தறி ஆய்வாளர் - 29

வருவாய் உதவியாளர் ( அனைத்து மாவட்ட அலகுகள் ) - 618

பேரூராட்சி செயல் அலுவலர் - 2

மொத்தம் = 1241.
-->

அஞ்சல் துறையில் 569 பணியிடங்கள்


ஒடிசா மாநில அஞ்சல்துறையில் காலியாக உள்ள 569 போஸ்ட்மாஸ்டர், மெயில் டெலிவரர், மெயில் கேரியர், மெயில் பேக்கர், ஸ்டாம்ப்வெண்டர் மற்றும் மெயில் மேன் போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 569
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கதான கடைசி தேதி: 14.05.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை, எழுத்துத் தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய odisha.postalcareers.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
-->

June 23, 2014

எலக்ட்ரிக்கல் பட்டதாரிகள் பவர் கிரிட் கார்ப்பரேஷனில் இன்ஜினியர் ஆகலாம் 15 காலியிடங்கள் அறிவிப்பு


எலக்ட்ரிக்கல் பட்டதாரிகள் பவர் கிரிட் கார்ப்பரேஷனில் இன்ஜினியர் ஆகலாம் 15 காலியிடங்கள் அறிவிப்பு

புதுடெல்லியில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய பவர் கிரிட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் எரிசக்தி துறையின் கீழ் இயங்கி வருகிறது. இதன் கீழ் உள்ள 178 துணை மின் நிலையங்கள் மூலம் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் காலியாக உள்ள 15 இடங்களுக்கு பி.இ., பி.டெக்., அல்லது எம்.டெக்., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள்:

1. துணை மேலாளர்: (எலக்ட்ரிக்கல்): 5 இடங்கள். (பொது - 3, ஒபிசி - 2).

தகுதி:

60 சதவீத தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் பாடத்தில் பி.இ.,/ பி.டெக்.,/ பி.எஸ்சி (இன்ஜினியரிங்)/ ஏஎம்ஐஇ அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி.

வயது: 27.6.2014 அன்று 39க்குள்.

சம்பளம்: ரூ.32,990 - 58,000.

2. முதுநிலை பொறியாளர்: (எலக்ட்ரிக்கல்): 10 இடங்கள். (பொது - 7, ஒபிசி - 1, எஸ்சி - 2)

தகுதி: பவர்சிஸ்டம் அனலிசிஸ் அல்லது பவர் சிஸ்டம் இன்ஜினியரிங் பாடத்தில் எம்.டெக்., அல்லது பி.எச்டி.,

வயது: 27.6.2014 அன்று 36க்குள்,

சம்பளம்: ரூ.29,100 - 54,500.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.400. இதை 'Power Grid Corporation' என்ற பெயருக்கு புதுடெல்லியில் மாற்றத்தக்க வகையில் ஏதேனும் ஒரு வங்கியில் டிடி எடுக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி., மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பதாரர்கள் www.powergridindia.com என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:

Power Grid Corporation of India Limited,
B9, Qutab Institutional Area,
Katwariasarai,
NEWDELHI 110 016.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.6.2014.

பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 11.7.2014.

-->

May 18, 2014

வேலை தேடி - STAFF SELECTION COMMISSION - HALL TICKET

Junior Engineers(Civil/Electrical/Mechanical and Quantity Surveying and Contract) Examination 2014 to be held on 25-05-2014 - Corrigendum  Important Notice  |  Print Admission Certificate   |  List of admitted candidates  |  Rejected applications List-1  List-2 |  


DOWNLOAD HALLTICKET/ADMISSION CERTIFICATE : http://www.sscsr.gov.in/JE2014-AC.htm 
 

-->

May 13, 2014

தினம் ஒரு மென்பொருள் - "டம்மி பிரிண்டர்"

அதிகாலை சரியாக 5மணி இருக்கும் பில்டர் காபியை சுவைத்து கொண்டு என்னோட அலைபேசியை எடுத்து பார்த்தா 27 missed  call அதுவும் என்னோட கோவக்கார உயிர் நண்பன் மணியிடமிருந்து, எனது அலைபேசி அதுவரை அமைதியாக இருந்துள்ளது ஆம் silent mode மாறியிருக்கு எப்படின்னு ஆராச்சி பண்ண நேரம் இல்ல.அவனோட அழைப்பு சரியாக எனக்கு இரவு 11 மணி அளவில் வந்திருக்கு மற்றும் 27 missed call இந்த குழப்பத்தோட அவன தொடர்பு கொள்ள  ,எதிர் முனையில் அவன் உனக்கெல்லாம் எதுக்கு phone என்று அலைபேசி அனல்பேசியா மாறும் அளவு என்னை காச்சு காச்சு ........... ஒரு வழிய அவன சமாதானபடுத்தி என்னடானு கேட்டா, என்னோட பிரிண்டர் ரிப்பேர் ஆச்சு, காலையில்  train அதான் டிக்கெட் பிரிண்ட் எடுக்க "டம்மி பிரிண்டர்" பத்தி நியாபகம் வந்துச்சு.அதான் உன்கிட்ட கேட்கலாம் போன் பண்ணினேன் ஆனா நீ..... நான் ஊருக்கு கிளம்பிட்டேன்.அடுத்த வாரம் நேர வந்து  "டம்மி பிரிண்டர்"  பத்தி கேட்கிறேன் சொல்லிட்டு போன வச்சுட்டான்.

இந்த மாதிரி என் தோழர் போல பிரிண்டர் இல்லாத பல தோழர்கள் irctc மற்றும் பல ஆன்லைன் வெப்சைட்ல பிரிண்ட் எடுக்க மிகவும் சிரம பட்டிருப்போம்.இந்த மாதிரி சிரமத்தை தவிர்க்கதான்  நாங்க "டம்மி பிரிண்டர்" பயன்படுத்துவோம் அதாங்க "CUTE  PDF " மென்பொருள். இந்த மென்பொருள் நார்மல் ப்ரிண்ட PDF மாத்தி கொடுத்திடும்.

1.இந்த வெப்சைட் போங்க  http://www.cutepdf.com/products/cutepdf/writer.asp

2 . free download click பண்ணுங்க  and Instal பண்ணுங்க ,

 



3. free converter பண்ணுங்க  Instal பண்ணுங்க

4.பிரிண்ட் கொடுங்க
 

5. இப்ப பிரிண்டர் டயலாக் பாக்ஸ்ல  உள்ள "cutepdfwriter"  செலக்ட் பண்ணுங்க, ok  கொடுங்க, filename  கொடுங்க  இப்ப உங்க பிரிண்ட் pdf  கோப்பா சேமிக்கப்பட்டு இருக்கும்.

 இந்த  "டம்மி பிரிண்டர்" பிரிண்டர் இல்லாதவங்களுக்கு பிரிண்டர் மாதிரி மிகவும் உதவிய இருக்கும்.







-->

August 27, 2013

TNPSC GROUP IV 25.08.2013 ANSWER KEY(27.08.2013)



TNPSC GROUP IV 25.08.2013 ANSWER KEY(27.08.2013)

http://toonclips.com/600/1558.jpg
https://drive.google.com/folderview?id=0B5ld7gKHZ7HablZmYk1DNkZpQUk&usp=sharing

Thanks Google and Tnpsc
-->

Tamil Nadu Teachers Eligibility Test - AUG 2013 ANSWER KEY




Tamil Nadu Teachers Eligibility Test - 2013 - Click Here for Tentative Answer Key Paper I and Paper II  
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGceuu2U8ez6R6qgjOPuBsWwY7K5s3HAbIVlzuehCRylWGhyphenhypheniMBgXkOLMaX8SXJqpBPm-lFR8qyaBUOP7PQ5-a5C7qU_ItROkHb0dJODXJtl-4JG9JH3MMLsv4kt483RwId_kVjIJNaKtq/s400/examfever2.jpg

 FROM MY GOOGLE DRIVE - PAPER I AND PAPER II
https://drive.google.com/folderview?id=0B5ld7gKHZ7HaVWlEQ1Y4NGZIejQ&usp=sharing 

PAPER 1 - https://docs.google.com/file/d/0B5ld7gKHZ7HaelpSd2xXZ1NHWFU/edit?usp=sharing
 
PAPER II - https://docs.google.com/file/d/0B5ld7gKHZ7HaOHZhcVNVU3d1OG8/edit?usp=sharing  
FROM TRB

PLEASE CLICK FOR PAPER I


PLEASE CLICK FOR PAPER II   

THANKS GOOGLE , TRB 
-->

August 19, 2013

நீதான் இந்த காலேஜ் பிரின்சிபால

+2 படிச்சு முடிச்ச நேரம் பல கல்லூரிகளிலும் விண்ணப்பம் செய்துகிட்டு இருந்த தருணம், மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் விண்ணப்பம் செய்ய போனேன், அங்குள்ள கிளெர்க் அண்ணகிட்ட போய் அண்ணே அண்ணே B.B.A-க்கு அப்பளை பண்ணனும் சொன்னே,அவரு கொஞ்சம் கோபத்தோட படிச்ச புள்ளைய இருக்க நோட்டீஸ் போர்டுல என்ன ஒட்டிருக்குனு பாருன்னு சொன்னாரு, அங்க  போய் பாத்தா எனக்கு கிறுகிறுன்னு வந்துடுச்சு ஏன்னா எல்லாம் இங்க்ளிப்சுல இருந்துச்சு அதான் இங்கிலிஷ்ல, அத ஒரு பத்து தடவை படிச்சிட்டு நேர பேங்க் போய் டிடி எடுத்துட்டு வந்து அந்த கிளார்க் அண்ணே கிட்ட கொடுத்தேன் அவரு டிடி-யையும் என்னையும் கோபத்தோட பாத்துட்டு என்னத்தான் ஸ்கூல் படிச்சிங்களோ ஒரு டிடி எடுக்க தெரியாம எங்க உயிரை வாங்க வாங்கிறிங்க சொல்ல நான் கோபத்தோட டிடி  தானே எடுத்திருக்கேன் சொன்னே, உடனே அவரு நல்ல டிடி எடுத்த ஏன் சர்விசுல இதுவரைக்கும் யாரும் அவங்க பேருல டிடி எடுத்தது இல்லேன்னு சொல்ல  இன்னொரு கிளர்க்கு நீதான் இந்த காலேஜ் பிரின்சிபாலன்னு கேட்க ,ரிசப்சென் புல்ல ஒரே  சிரிப்பு அப்பத்தான் எனக்கு புரிஞ்ச்சு பிரின்சிபாலுன்னு எடுக்காம எம்  பேருல எடுத்தது.அப்புறோம்  டிடி மாத்தி ஒருவழியா B.B.A படிச்சு முடிச்சேன். எந்த ஒரு டிடி எடுத்தாலும் இந்த நிகழ்வு சிரிப்பையும் கொஞ்சம் மனவருத்ததையும் தந்துடும். அனுபவம் ஒரு ஆசான் என்பது உண்மைதான்.

August 18, 2013

மீன வெடிவச்சு பிடிப்போம் வாங்க

இந்த (Android super dynamite fishing game) விளையாட்டோட கதாநாயகன் அதான் நாம ஒரு பெரிய படக (கப்பல் ஹி ஹி சாரி )  எடுத்துகிட்டு கடல் மேல போறோம் எம்புட்டு காலத்துக்குத்தான் தூண்டில், வலைனூ மீன் பிடிக்கிறதுன்னு யோசிச்ச நம்ம ஆளு புதுசா ஒரு டெக்னிக் யூஸ் பண்றாரு அதான் வெடி,ஐஸ் பெட்டி,லவ் பிஷ் இன்னும் இது மாதிரி பயங்கரமான் ஆயுதங்கள  வச்சு மீன் பிடிகிறது.வெடிவச்சு மீன் பிடிக்கிறதா அடங்... நீங்க திட்டறது  எனக்கு கேட்குது என்ன பன்றது அப்படிதான் கேம் டெவலப் பன்னிருகாங்க. வெடி வச்சு கஷ்டப்பட்டு பிடிச்ச மீன காக்கா தூக்கிட்டு போகுது, அப்ப நம்மகிட்ட இருந்த அந்த பயங்கரமான ஆயுதத்த வச்சு அந்த பாவத்த செய்யுறோம் அதான் அந்த காக்காவ சுடுறோம். படகுபுல்லா மீனோட கரைக்கு திரும்புறோம்.மீன் வித்த காச வச்சு புது படகு,இன்னும் பயங்கரமான ஆயுதங்கள் எல்லாம் வாங்குறோம்.இந்தமாதிரி கேம் மூவ் ஆகுது.மிகவும் அருமையான கேம்.

அனைத்து மீனவர்களும் ,மீன்களும் என்ன மனிக்கணும் இந்த பாவத்துக்கு நான் பொறுப்பு கிடையாது...................

இந்த விளையாட்டு ஆண்ட்ராய்ட் மற்றும் பிளாஷ் முகப்பு கொண்டது.

இந்த விளையட்டை  கூகுளே ப்ளே டவுன்லோட் செய்ய  

கம்ப்யூட்டர்ல  இந்த பாவத்த செய்ய 

கூகுளே துணையோடு தேட

August 17, 2013

பாட் பிளேயர்



இணையத்தில நீந்திக்கிட்டு இருந்தப்ப பாத்தா இந்த சின்ன வண்ண மீன்தான் பாட் பிளேயர். விஎல்சி ,மீடியா பிளேயர் இந்த மென்பொருள் வரிசையில இந்த பாட் பிளேயரும் ஒன்னு.இது விஎல்சி பிளேயர் மாதிரி ஓபன் சோர்ஸோ , பலதரப்பட்ட இயக்கு தளத்தில செயல்படுவதில்ல ஆனா இது ஒரு இலவச மென்பொருள், விண்டோஸ்  இயக்கு தளத்தில  மட்டும் செயல்படகூடியது.  வேகமானதும் பயண்பாட்டுக்கு எளிமையான ஒன்னு. டேமேஜ் ஆனா வீடியோ கோப்புகளையும் ப்ளே பண்ணுது. சப் டைட்டில் ,எம்படட் சப் டைட்டில் சப்போர்ட் பண்ணுது.  பயன்படுத்தி பாருங்க உங்களுக்கே தெரியும்.

http://get.daum.net/PotPlayer/v2/PotPlayerSetup.exe 







-->

August 9, 2013

ஒரு பயணியின் குரல்



இரண்டு தினங்களுக்கு முன்னால் லேசான மழை தூறல் தொடர நான் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு வந்து சேர்ந்தப்ப மதியம் மணி 1:45 இருக்கும்,அன்று எனக்கும் மற்றவர்களுக்கும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது மழை தான் லேசான தூறல்தான் இருந்தாலும் மனசுக்குள்ள ஒரு மகிழ்ச்சி. அந்த தூறல் தொடர மதுரை டு தேவகோட்டை பேருந்து தடத்துக்கு வந்தப்ப தேவகோட்டைக்கு கம்பீரமா இரண்டு தனியார் பேருந்தும்,கிளம்பும் தருவாயில் அரசு பேருந்தும் நின்னுகிட்டு இருந்துச்சு பணிநிமித்தம் காரணமா அரசு பேருந்துல பயணிக்க வேண்டிய நிர்பந்தம்.

பக்கத்தில இருந்த தனியார் பேருந்துல பை,கைக்குட்டை,... வாங்கி நடத்துனர் பயணிகளுக்கு இடம் போட்டார் ஆனா அரசு பேருந்துல நடத்துனர் எங்கவேனாலும் உடகாந்துங்க ஓட்டுனர் இடத்த தவிரனு சொன்னாரு. ஓட்டுனர்,நடந்துனர்,நான் மற்றும் இன்னும் ஒருசில பயணிகளோட அந்த பேருந்து தன்னோட பயணத்தை தொடங்கிச்சு.நான் டிக்கெட் எடுத்தப்ப எனக்கு கிறுகிறுன்னு வந்துருச்சு தனியார் பேருந்து கட்டனத்தவிட அரசு பேருந்து கட்டணம் அதிகம்தான் ஆனா இந்த கட்டணம் அதவிட அதிகாமா இருந்துச்சு அப்புறமா தான் தெறிச்சு அது சாதா பேருந்து இல்ல சூப்பர் பாஸ்ட் அதிலேயும் பாயிண்ட் டு பாயிண்ட் எக்ஸ்பிரஸ்.வீடியோ மற்றும் ஆடியோ 5.1 போன்ற ......... எந்தவிதமான வசதியும் இல்லாத குறையை போக்க பேருந்தோட சத்தம்,கண்ணாடிய ஏத்திவிட்டு குளிர்ந்த காற்றையாவது சுவாசிப்போன்னு முடிந்தளவு முயற்சித்தேன் ஆனா கண்ணாடி கையோட வந்துருச்சுனாஅந்த பயத்தோட கண்ணாடியே இல்லாத இருக்கையா பார்த்து உட்கார்ந்தேன்.

 சிறிது நேரம் அந்த லேசான சாரலும் குளிர்மையான காற்றும் இதமா இருந்துச்சு பின்பு அந்த தூறல் பலத்த மழையா பெய்தது அதுனால மறுபடியும் வேற இருக்கை மாறி உட்கார்ந்தேன்.கொஞ்ச நேரத்துல பேருந்தோட எல்லா பக்கமாவும் பேருந்தையும் எங்களையும் மழை குளுப்பாட்டியது.அப்பத்தான் நடத்துனர் சொன்ன பாயிண்ட் டு பாயிண்ட் எக்ஸ்பிரஸ் அர்த்தம் புரிந்தது. பேருந்து வளைவுகளில் வளைந்து செல்லும்போது நாம எதிர் சீட்டுக்கே பயணித்து விட்டுவரும் அனுபவம்,எந்த சன்னல் கண்ணாடி உடைந்து விழுமோ என்ற பயோத்தோட சீட்டோட விளிம்புக்கே வந்து உட்காந்துட்டேன்.பலத்த மழையில் அந்த பேருந்து மிதவை பேருந்தாவே மாறிடிச்சு.வேகம்னா வேகம் அப்படி ஒரு வேகம் எங்க பின்னாடி கிளம்பின தனியார் பேருந்து இந்த சூப்பர் பாஸ்ட் சாரி பாயிண்ட் டு பாயிண்ட் சூப்பர் எக்ஸ்பிரஸ் பேருந்த முந்திபோர அளவுக்கு. ஒருவழியா தேவகோட்டை பேருந்து நிலையத்துக்கு வந்தப்ப "வாட் எ  லாங் ஜெர்னி" மனசு சொல்லிச்சு.தனியார் பேருந்து கட்டனத்தவிட அதிகமா வாங்கிறாங்க கொஞ்சம் பேருந்த பராமரிக்க கூடாதா அப்படிகிற மனவருதத்தொட என்னோட ............... 

August 8, 2013

Check your Application Status TNPSC GROUP-IV Services, 2013 - 2014 (Date of Written Examination:25.08.2013)

Posts included in GROUP-IV Services, 2013 - 2014
(Date of Written Examination:25.08.2013)
RECEIPT OF APPLICATION (ACKNOWLEDGEMENT)


-->

August 7, 2013

TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013 HALL TICKET

TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013

1. List of Admitted Candidates in Paper I   - 271909 (687 Centres)  
2. List of Admitted Candidates in Paper II  - 415942 (1070 Centres)
 
Date of Examination: Paper I  : 17.08.2013 Timing: 10:00 A.M to 01:00 P.M
 
Date of Examination: Paper II : 18.08.2013 Timing: 10:00 A.M to 01:00 P.M


1.PLEASE CLICK FOR PAPER I  



2. PLEASE CLICK FOR PAPER II
 
Tamil Nadu Candidate             
 
Puducherry Candidate
thanks Google , Trb
Today's Quotes
.          “If you don’t build your dream, someone else will hire you to help them build theirs.”                                                             Dhirubhai Ambani

August 6, 2013

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012-2013 Tentative Answer Key

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012-2013 Tentative Answer Key published on net. 

1. https://drive.google.com/folderview?id=0B3xC45supqQdR0R3S2szdWdZejA&usp=sharing

2. http://trb.tn.nic.in/PG2013/29072013/msg1.htm
 

 Thanks google and TRB

-->

March 9, 2013

தண்ணீரின் தாகம்


மழை(rain) பூமித்தாய்க்கு மழலை என்னும் இயற்கை வளங்களை தரும் உயிரணு என்று சொல்வதுதான் ஏற்புடையதாகஇருக்கும். மழை அனைவருக்கும் பிடித்த மிகவும் முக்கியமான ஒன்று, இந்த மழை எவ்வாறு உருவாகிறது? வெப்பத்தின் காரணமாகக்  கடல்கள்,ஏரிகள்,ஆறுகள் மற்றும் ஏனைய நீர்வழிகளில்  உள்ள நீரானது திரவ நிலையில் இருந்து நீராவி நிலைக்கு மாறி காற்றில் கலந்து வான்வெளி சென்று மேகங்களாக உருவாகின்றன. இதுவே பிறகு சுத்தமான நீராக அதாவது மழையாக பெய்கிறது. இந்தநிகழ்வு சாதரணமான நிகழ்வு அல்ல.  பிரபஞ்சம் (Universe) எனும் சக்தியின் திட்டமிட்ட செயல்பாடுகளில் இதுவும் ஒன்று என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் கடல் மற்றும் ஏனைய வழிகள் மூலமாக மாறும் மேகமானது அந்த இடத்தில் மட்டும் மழை பொழியவேண்டும். ஆனால், அவ்வாறு இல்லாமல் மேகமானது தண்ணீர் வண்டிபோல் நகர்ந்து சென்று மழையாகப்  பொழிகிறது.இவ்வாறான, மழை சமீபமாக சரிவர பொழிவதில்லை அதற்கு காரணம் யார் ? நாம் தான். ஆம்,  நாமே தான் காரணம். மழைநீரை சரியாக பயன்படுத்தாதது,இயற்கை வளங்களை அழிப்பது போன்ற செயல்களால் நம்முடைய மரணத்திற்கு நாமே நாள் குறிக்கிறோம்.பூமியின் ரத்த ஓட்டமே நிலத்தடி நீர்தான், பூமியில் துளையிட்டு பூமியின் நீர்வளத்தை உபயோகிப்போம். ஆனால், நீர்வளத்தை மேம்படுத்த எந்த முயற்சியும் நாம் மேற்கொள்வதில்லை. 

சீனா மற்றும்  பிரேசில் நாடுகள் கூரை நீர் மழை சேகரிப்பின் மூலம் சேகரிக்கப்படும் மழைநீரை கால்நடை, சிறு பாசன நீர் ,உள்நாட்டு குடிநீர் தேவைகள் மற்றும் நிலத்தடி நீர் நிலைகளை நிரப்பவும் பயன்படுத்துகிறார்கள்.




நிலத்தடி நீர் (Ground water) ஏன் குறைகிறது? நிலத்தடி நீரை பாதுகாப்பதில் நமது பங்கு என்ன?

1.மக்கள் தொகை பெருக்கம்  மற்றும்  நீரின் அதிகமான பயன்பாடு
2.முறையாகச் சேமிக்கப்படாத மழைநீர்
3. பிளாஸ்டிக் போன்ற நவீன  நாகரிகத்தின் தாக்கம்
4.லாபத்திற்காக ஆற்று மணலை எடுத்தல் என  இன்னும் பல . . . . .     முறையாக மழைநீரை  சேகரிபத்தின் மூலம் எதிகால சந்ததியனரை தாகம்....... தாகம்......................என்ற நிலையிலிருந்து காப்பாற்றுவோம்.  தங்கத்தை விடத்  தண்ணீரின் விலை பத்து மடங்கு என்ற நிலை ஏற்படாமல் தவிர்ப்போம்.

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...