December 30, 2015

புத்தாண்டு முதல் மத்திய அரசு இளநிலை பணிகளுக்கு நேர்முகத் தேர்வு ரத்து

puthiyathalaimurai
மத்திய அரசின் இளநிலை பணியிட நியமனங்களில் நேர்முக தேர்வு முறையை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனை வரும் புத்தாண்டு முதல் அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை, மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கும், அமைச்சகங்களுக்கும், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை எழுதியுள்ள கடிதத்தில் ‘‘எதிர்காலத்தில் பணியாளர் தேர்வு நடவடிக்கை விளம்பரங்கள், நேர்முக தேர்வு இன்றி வெளியிடப்பட வேண்டும் என்றும், நேர்முக தேர்வு கிடையாது என்பது அனைத்து குரூப் சி, அரசிதழ் பதிவு பெறாத குரூப் பி பிரிவுகளுக்கு, அதற்கு சமமான பிற பணியிடங்களுக்கு பொருந்தும் என்றும், அதே சமயம், திறன் அறியும் சோதனை, உடல் தகுதி சோதனை தொடரும். எனினும் இந்த சோதனைகள், தகுதி அடிப்படையில் இருக்கும். இத்தகைய சோதனைகள் மதிப்பெண்கள் அடிப்படையில் இருக்காது’’ என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனிடயே சில குறிப்பிட்ட பணிகளுக்கு நேர்முகத்தேர்வு அவசியம் என்று அமைச்சக துறைகள் கருதினால், நேர்முக தேர்வு இல்லை என்ற நடைமுறையில் இருந்து விலக்கு கேட்டு, சம்பந்தப்பட்ட அமைச்சரின் ஒப்புதலுடன் மத்திய பணியாளர், பயிற்சி துறைக்கு விரிவாக எழுத வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக ஜனவரி 7ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு அனைத்து அமைச்சங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

நன்றி புதிய தலைமுறை ................... http://www.puthiyathalaimurai.tv/no-interview-for-non-gazetted-govt-jobs-from-january-1-254827.html


logo

புதுடெல்லி,
புத்தாண்டு முதல் மத்திய அரசு இளநிலை பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து ஆகிறது. இது தொடர்பாக துறைகளுக்கும், அமைச்சகங்களுக்கும் உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு முடிவு மத்திய அரசின் இளநிலை பணியிட நியமனங்களில் நேர்முக தேர்வு முறையினை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு முடிவு எடுத்தது.
புத்தாண்டு முதல் இதை அமல்படுத்தவும் தீர்மானித்து, அறிவிப்பு வெளியிடப்பட்டது.
உத்தரவு இந்த நிலையில், இளநிலை பணியிடங்களில் நேர்முக தேர்வுகளை ஒழிப்பதற்கு 2 நாட்களுக்குள் (31–ந் தேதிக்குள்) நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கும், அமைச்சகங்களுக்கும், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை ஒரு கடிதம் எழுதி உள்ளது.
அதில், ‘‘எதிர்காலத்தில் பணியாளர் தேர்வு நடவடிக்கை விளம்பரங்கள், நேர்முக தேர்வு இன்றி வெளியிடப்பட வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.
உடல் தகுதி மேலும், ‘‘நேர்முக தேர்வு கிடையாது என்பது அனைத்து குரூப் சி, அரசிதழ் பதிவு பெறாத குரூப் பி பிரிவுகளுக்கு, அதற்கு சமமான பிற பணியிடங்களுக்கு உரித்தானது’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ‘‘திறன் அறியும் சோதனை, உடல் தகுதி சோதனை ஆகியவை நேர்முக தேர்வில் இருந்து மாறுபட்டவை. அவை தொடரும். எனினும் இந்த சோதனைகள், தகுதி அடிப்படையில் இருக்கும். இத்தகைய சோதனைகள் மதிப்பெண்கள் அடிப்படையில் இருக்காது’’ என்றும் கூறப்பட்டுள்ளது.
விலக்கு வேண்டுமானால்... ஆனால் சில குறிப்பிட்ட பணி இடங்களுக்கு நியமனத்தின் ஒரு அங்கமாக நேர்முக தேர்வு தேவை என்று அமைச்சகமோ, துறையோ கருதினால், நேர்முக தேர்வு இல்லை என்ற நடைமுறையில் இருந்து விலக்கு கேட்டு, சம்பந்தப்பட்ட மந்திரியின் ஒப்புதலுடன் மத்திய பணியாளர், பயிற்சி துறைக்கு விரிவாக எழுத வேண்டும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு குறித்த பதிலை விளக்க அறிக்கையாக அனைத்து அமைச்சகங்களும் 7–ந் தேதிக்குள் அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய பணியாளர், பயிற்சி துறை அறிவுறுத்தியபடி நடந்துகொள்ளுமாறு பொதுத்துறை நிறுவனங்களுக்கு மத்திய அரசின் பொது நிறுவனங்கள் துறை கடிதம் எழுதி உள்ளது.
எனவே புத்தாண்டு முதல், மத்திய அரசின் இளநிலை பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு ரத்தாகிறது.

நன்றி தினத்தந்தி  ..........................

http://www.dailythanthi.com/News/India/2015/12/30041016/New-YearFromCentral-governmentBachelorTasksWalkin.vpf

-->

+2, பட்டதாரிகளுக்கு அரசு பணி

உத்தரப்பிரதேச அரசில் நிரப்பப்பட உள்ள 88 எழுத்தர், எம்டிஎஸ் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: எழுத்தர் (Clerk)
காலியிடங்கள்: 88
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
வயது வரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி யுடன், கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Multi-tasking staff
காலியிடங்கள்: 59
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
வயது வரம்பு: 18 - 25-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: +2 அல்லது ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: http://www.esicuttarpradesh.org என்ற இணையதளத்தில் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 06.01.2016
மேலும் விவரங்கள் அறிய http://www.esicuttarpradesh.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.
-->

காவல் துறையில் 1,370 காவலர் பணி

ஒடிஸா காவல்துறையில் நிரப்பப்பட உள்ள 1,370 காவலர்கள் பணியிடங்களுக்கான(government jobs) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணி: Constable
காலியிடங்கள்: 1,370
வயது வரம்பு: 18 - 23-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு(SSLC) அல்லது பிளஸ் 2(HSC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு(WRITTEN TEST), நேர்முகத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, ஓட்டுநர் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 04.01.2016
மேலும் விவரங்கள் அறிய odishapolice.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
-->

December 29, 2015

பொறியியல் பட்டதாரிகளுக்கு என்எல்சி நிறுவனத்தில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழகத்தின் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் இந்திய அரசு நிறுவமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழக நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 100 நிர்வாக பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக். முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 பணி - காலியிடங்கள் விவரம்:

பணி: Executive Trainee (Mechanical) - 50

பணி: Executive Trainee (Electrical) - 15

பணி: Executive Trainee (Electrical) -05

பணி: Executive Trainee (Civil) - 10

பணி: Executive Trainee (Control & Instrumentation) - 05

பணி: Executive Trainee (Mining) - 10

பணி: Executive Trainee (Computer) - 05

தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், சிவில். Instrumentation, Electronics & Instrumentation,Instrumentation and Control, கம்ப்யூட்டர், மைனிங், இன்பர்மேசன் டெக்னாலஜி போன்ற பிரிவுகளில் பொது பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களுடனும்,

எஸ்சி.,எஸ்டி., ஒபிசியினர் 50 சதவீத மதிப்பெண்களுடனும் பி.இ அல்லது பி.டெக் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500.

வயது வரம்பு: 1.12.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைனில் செலுத்தவும். எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை: கேட்-2016 தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The General Manager (HR),

Recruitment Cell,

Human Resource Department,

Neyveli Lignite Corporation Limited,

Corporate Office, Block-1,

NEYVELI- 607 801.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.01.2016.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 29.01.2016.

மேலும் விவரங்களுக்கு www.nlcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்

December 25, 2015

ஐடிஐ முடித்தவர்களுக்கு ராணுவ பொறியியல் துறையில் 762 பணி

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென்னக ராணுவ பொறியியல் சேவை படையகத்தில் காலியாக உள்ள 762 Mate (Tradesman) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முத்த இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 762

மாநில வாரியான காலியிடங்கள் விவரம்:

1. மகாராஷ்டிரா, புனே கிர்கி ரேஞ்ச் மலைப் பகுதி: மேட் (டிரேட்ஸ்மேன்) - 85

2. மகாராஷ்டிரா, தியோலாலி பிரிவு: மேட் (டிரேட்ஸ்மேன்) - 172

3. கோவா, வாஸ் கோடகாமா பிரிவு: மேட் (டிரேட்ஸ்மேன்) - 20

4. தமிழ்நாடு, நீலகிரி வெலிங்டன் பிரிவு: மேட் (டிரேட்ஸ்மேன்) - 24

5. கர்நாடகா, பெங்களூர் பிரிவு: மேட் (டிரேட்ஸ்மேன்) - 162

6. கேரளா, கொச்சி, எழிமலா பிரிவு: மேட் (டிரேட்ஸ்மேன்) - 63

7. அந்தமான் நிகோ பர் தீவுகள், போர்ட் பிளேர் பிரிவு: மேட் (டிரேட்ஸ்மேன்) - 196

8. மகாராஷ்டிரா, நாக்பூர் பிரிவு: மேட் (டிரேட்ஸ்மேன்) - 40

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

வயது: 26.12.2015 தேதியின்படி 18 - 27க்குள். எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு அவர்கள் பணியாற்றிய ஆண்டுகளுக்கு ஏற்றாற்போல் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

எழுத்துத் தேர்வு: 10.04.2016 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்தவ விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு நீலகிரி மாவட்டம் வெலிங்கடன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: mes.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கணினியில் தட்டச்சு செய்து விவரங்களை தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு புதுச்சேரி விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Commander Works Engineer,

Wellington, Barracks-Post,

The Nilgiris,

Tamilnadu- 643231.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.12.2015.

ஐடிஐ முடித்தவர்களுக்கு கப்பல் கட்டும் தளத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி

இந்திய ராணுவ அமைச்சகத்தின் கீழ் செயல்படும் விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பற்படை கப்பல் கட்டும் தளத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி நிலையத்தில் 185 ஐடிஐ முடித்தவர்களுக்கு உதவித் தொகையுடன் தொழிற் பழகுநர் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. இதில் சேர விரும்பும் ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: Trade Apprentices

பயிற்சி காலம்: 1 ஆண்டு (2016 - 2017)

தொழில் பழகுநர் பயிற்சியளிக்கப்படும் தொழிற் பிரிவுகள் மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. எலக்ட்ரீசியன்- 35

2. எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் - 25

3. பிட்டர் - 30

4. இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் - 18

5. மெஷினிஸ்ட் - 20

6. மெக்கானிக் மெஷின் டூல் மெயின்டெனன்ஸ் (எம்எம்டிஎம்) - 06

7. பெயின்டர் (பொது) - 12

8. ரெப்ரிஜிரேசன் மற்றும் ஏர் கண்டிஷனிங் மெக்கானிக் - 18

9. வெல்டர் (கேஸ் மற்றும் எலக்ட்ரிக்) - 18.

தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், சம்பந்தப்பட்ட தொழிற் பிரிவில் 65 சதவீத மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். எலக்ட்ரானிக் மெக்கானிக் தொழிற் பிரிவிற்கு ரேடியோ மற்றும் டிவி மெக்கானிக் தொழிற் பிரிவில் ஐடிஐ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

December 24, 2015

தென்னக ரயில்வேயில் 976 பணியிடங்கள்

இந்திய ரயில்வேயின் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென்னக ரயில்வேயில் Goods Guard, Clerk, Typist,Station Master போன்ற தொழில்நுட்பம் அல்லாத 976 பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் 2016 வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Commercial Apprentice
காலியிடங்கள்: 105
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
பணி: Traffic Apprentice
காலியிடங்கள்: 127
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
பணி: Goods Guard
காலியிடங்கள்: 182
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
பணி: Junior Accounts Assistant-Cum-Typist
காலியிடங்கள்: 93
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
பணி: Senior Clerk-Cum-Typist
காலியிடங்கள்: 76
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
பணி: Asst Station Master
காலியிடங்கள்: 393
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
வயதுவரம்பு: 18 - 32க்குள் இருக்க வேண்டும். அனைத்து இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பு சலுகையில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். (விரிவான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை பார்க்கவும்)
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: http;//www.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 25.12.2015
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.01.2016
மேலும் விவரங்கள் அறிய http://rrbsecunderabad.nic.in/CEN_03_2015.pdf, என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
-->

SECFL சுரங்க நிறுவனத்தில் சர்வேயர் பணி

SECFL சுரங்க நிறுவனத்தில் சர்வேயர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 

 

சத்தீஸ்கர் செயல்பட்டு வரும் South Eastern Coal Fields Limited நிறுவனத்தில் காலியாக உள்ள சர்வேயர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலியிடங்கள்: 75
பணி: Deputy Surveyor T& S grade ‘C’:
சம்பளம்: மாதம் ரூ.19,035.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் DGMS ஆல் அங்கீகரிக்கப்பட்ட சர்வேயர் சான்றிதழை (Surveyor Certificate of Competency) பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 09.01.2016 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 30க்குள்ளும், ஒபிசியினர் 33 வயதிற்குள்ளும், எஸ்சி.,எஸ்டியினர் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.secl.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Deputy Manager (MP),
South Eastern Coalfields Limited,
Post Box No: 60,
Seepat Raod, Bilaspur,
Chhattisgarh. PIN: 495006.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.01.2016.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 09.01.2016.
மேலும் விவரங்கள் அறிய www.secl.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

 

-->

இந்திய ராணுவத்தில் மத ஆசிரியர் பணி

இந்திய ராணுவத்தில் மத ஆசிரியர் பணி 

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள மத ஆசிரியர் (Religious Teacher) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளன. இதற்கு தகுதியான இந்திய ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Religious Teacher (Junior Commissioned Officer)
காலியிடங்கள்: 85
துறை வாரியான காலியிடங்கள் விவரம்:
1. பண்டிட் - 74
2. கிராந்தி - 04
3. பாதிரி - 02
4. பண்டிட் (கூர்க்கா) - 01
5. மவுலவி (ஷியா) - 01
6. புத்தபிட்சு (மகாயானம்) - 03
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 வழங்கப்படும்.
வயது வரம்பு: 01.01.2016 தேதியின்படி 27 - 34க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விவரங்களுக்கு இணையதலத்தை பார்க்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதி, உடற்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2015.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 28.02.2016.
எழுத்துத் தேர்வு முடிவு அறிவிக்கப்படும் தேதி: 04.05.2016.
மேலும் விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
 
 
 
-->

அணுசக்தி துறையில் பணி

அணுசக்தி துறையில் 70 பாதுகாவலர் பணி 

 

இந்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் ராஜா ரமணா தொழில்நுட்ப மையத்தில் காலியாக உள்ள பாதுகாவலர் பணியிடங்களு 10, பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Security Officer/A
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ராணுவத்தில் அதிகாரியாக பணி புரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

பணி: Security Guard - II- Group C
காலியிடங்கள்: 58
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு: பொது பிரிவினருக்கு 27க்குள்ளும், எஸ்சி., எஸ்டியினருக்கு 32க்குள்ளும், ஒபிசியினருக்கு 30க்குள்ளும் இருக்க வேண்டும். ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கு அவர்கள் பணியாற்றிய ஆண்டுகளை கழித்தால் 30 வயதாக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: உடற் திறன் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: Assistant Security Officer/A பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் www.cat.gov.in/hrd/Openings/Current_Openings.html என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். Security Guard பணிக்கு ஆன்லைனிலோ அல்லது அஞ்சல் மூலமோ விண்ணப்பிக்கலாம். அஞ்சலில் விண்ணப்பிப்பவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விவரங்களை தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Assistant Personnel Officer (Recruitment),
RAJA RAMANA CENTRE FOR ADVANCED TECHNOLOGY,
P.O: CAT, INDORE- 425 013,
Madhya Pradesh.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.12.2015.
அஞ்சலில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2015.
மேலும் விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்தை பார்க்கவும்.
-->

இ.எஸ்.ஐ வேலைவாய்ப்பு

Employee's State Insurance Corporation

மேல்நிலை எழுத்தர்கள், பன்முக உதவியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு உரிய விண்ணப்ப அறிவிப்பை தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் (இஎஸ்ஐ) வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணை இயக்குநர் சு.கருப்பசாமி (நிர்வாகம், மக்கள் தொடர்பு) புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தத் துறையின் தமிழ்நாடு மண்டலத்தில் 202 மேல்நிலை எழுத்தர்கள், 193 பன்முக உதவியாளர்கள் ஆகிய காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதில், மாற்றுத் திறனாளிகளுக்கும் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தின், தமிழ்நாடு மண்டலத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மருத்துவமனையிலும் செவிலியர், மருந்தாளுநர், அறுவை சிகிச்சை மைய உதவியாளர் போன்ற பல்வேறு பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் கட்டாயம் இணையவழி மூலமாக மட்டுமே வரும் ஜனவரி 6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு www.esichennai.org www.esic.nic.in ஆகிய இணையதளங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விமானப்படையில் அதிகாரி பணி

இந்திய விமானப்படையின் பல்வேறு பிரிவுகளில் நிரப்பப்பட உள்ள Commissioned Officer பணிகளுக்கு தகுதியான இருபாலரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Commissioned Officer (Flying Branch)
வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 20 - 24க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் கணிதப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: Commissioned Officer (Technical Branch)
வயதுவரம்பு: 20 - 26க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் போன்ற பாடங்களை முக்கிய பாடமாக கொண்டு Aeronautical Engineering படிப்பை முடித்து பி.இ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: Commissioned Officers (Ground Duty Branch)
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பி.காம், எம்.காம், சிஏ, ஐசிடபுள்ஏ முடித்திருக்க வேண்டும். இந்திய விமானப்படையின் கல்விப்பிரிவில் பணிபுரிய குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்திய விமானப்படையால் நடத்தப்படும் Air Force Common Admission Test (AFCAT)-2016 தகுதித்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 21.02.2016
தமிழகத்தில் எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, கோவை(சூலூர்), தஞ்சாவூர்
விண்ணப்பிக்கும் முறை: www.careerairforce.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2015
மேலும் விவரங்கள் அறியவும், விண்ணப்பிப்பவர்கள் தொடர்ந்து www.careerairforce.nic.in  இணையதளத்தை கவனித்து வரவும்.
-->

தேசிய தகவல் தொடர்பு மையத்தில் பணி

புது தில்லியில் செயல்பட்டு வரும் தேசிய தகவல் தொடர்பு மையத்தில் (National Institute of Electronics and Information Technology, NIELIT) காலியாக உள்ள துணை இயக்குநர்(சட்டம்), நிர்வாக அதிகாரி, ஆராய்ச்சியாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 1(50) 2013-NIELIT
பணி: Dy.Director (Law)
பணி: Assistant Director (Database)
பணி: Assistant Director (Finance)
பணி: Assistant Director (Admin)
பணி: Finance Officer
பணி: Administrative Officer
பணி: Senior Assistant (Accounts)
பணி: Library & Information Assistant
பணி: Front Office Counselor
பணி: Assistant (Accounts)
பணி: Assistant
பணி: Stenographer
பணி: Junior Assistant
பணி: Scientist "D"
பணி: Scientist "C"
பணி: Scientist "C" (Marketing)
பணி: Scientist "B"
பணி: Sr.Technical Assistant
பணி: Technical Assistant
பணி: Junior Technical Assistant
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு சென்னையில் வைத்து நடைபெறும். நேர்முகத் தேர்வு குறித்த விவரம் அழைப்பு கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: http://recruitment.nielit.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.01.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://recruitment.nielt.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.



Today's Thoughts
இன்றைய சிந்தனை  :

இன்னல்களும் பிரச்னைகளும் நாம் வளர்ச்சி அடைவதற்காக கடவுள் வழங்கும் வாய்ப்புகள் என்பது என் நம்பிக்கை.
- அப்துல் கலாம்
 
தங்களுக்கு எங்களிடம் இருந்து  உபயோகமான தகவல்கள்(வேலை,அரசு தேர்வுகள்,தேர்விற்கான  முந்தய வருட வினாக்கள்,மேலும் பயனுள்ள தகவல்கள்) இலவசமாக வேண்டுமா. ஆம் எனில் 9952569058 இந்த அலைபேசி என்னை NETBIRD என்ற பெயரில் தங்களது அலைபேசியில் பதிவு செய்து கொள்ளவும்.பிறகு WHATSAPP ANDROID APPS  மூலமாக தங்களது பெயரை எனது அலைபேசி எண்ணிற்கு WHATSAPP மூலமாக அனுப்பவும் .
-->

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...